அதான் எல்லா "வேலையும்" முடிஞ்சிருச்சே!.. எப்ப அறிவிக்க போறீங்க தலைவா?
ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்ட போதிலும் அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாகாது என்றே கூறப்படுகின்றன.
Recommended Video

சென்னை: கட்சி கொடி, கட்சியின் சின்னம், பெயர் என அனைத்தும் முடிவடைந்து விட்டபோதிலும் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.
ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை. ஆனால் அவரோ அதுகுறித்து எந்த வித சிக்னலும் காட்டாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசிய பேச்சிலிருந்து அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. மேலும் அவரது சகோதரர் சத்திய நாராயண ராவும், நண்பர் ராஜ்பகதூரும் இதையே உறுதிப்படுத்தினர்.

இப்போ அவசியம் இல்லை
இந்நிலையில் ரஜினி தனது பிறந்தநாளில் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம் எப்போது களத்தில் இறங்கி வேலை செய்ய போறீங்க என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவரோ இப்ப அவசியம் இல்லைங்க என்று கூறிவிட்டார்.

கருத்து நிலவி வந்தன
இந்த செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு, அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்ற கருத்து நிலவி வந்தது. எனினும் ரசிகர்கள் மனம்தளராமல் இப்ப அவசியம் இல்லேனு தானே சொன்னார், வரமாட்டேனு சொல்லலையே என்ற எண்ணத்துடன் அவரது அறிவிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

நாளை பிறந்தநாள்
இந்நிலையில் நாளை பிறந்த நாளன்று எந்த வித அறிவிப்பும் இல்லை என்றும் ஜனவரி மாதத்திலேயே அவர் அறிவிக்கக் கூடும் என்றும் அவர் தரப்பு வட்டாரங்கள் கூறி வந்தன. நாளை ரசிகர்களை அவர் சந்திக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது புது தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இந்த மாத இறுதியில்
அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கு தேவையான கட்சி சின்னம், கொடி, தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு, நிர்வாகிகள் குறித்த பட்டியல் என அனைத்தும் தற்போது தயாரியுள்ளதாம். ஆனால் அறிவிப்பு ஒன்னுதான் பாக்கி என்கிறீர்களா?, அதுவும் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications