ஆனது 8 ஆண்டுகள்... எங்கே பாலகுமாரன், யோகி, புதுவை ரத்தினதுரை... சிங்களத்தின் தொடரும் கள்ள மவுனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈழத்தில் இன அழிப்புப் போர் முடிவடைந்து 8 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன... ஆனால் அன்று வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த மூத்த தலைவர்கள் பாலகுமாரன், பேபி சுப்பிரமணியம், யோகி, புதுவை ரத்தினதுரை ஆகியோரது கதிதான் என்னவென இதுவரை தெரியவில்லை...

8 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த நாள் இன்று. இது தொடர்பாக எழுத்தாளர் பாமரன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Where is KV Balakumar?

உச்சகட்ட இன அழிப்புப்போர் நடந்து முடிந்து இன்றோடு எட்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நீதியின் கண்கள் திறக்குமா? என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் எண்ணற்ற ஈழ மக்கள்.
.
அதிலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் முன்னர் ஈழப்புரட்சி அமைப்பின் தலைவராகவும் (ஈரோஸ்).... பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளது முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் மாபெரும் பங்காற்றிய க.வே.பாலகுமார் கதி என்னவாயிற்று? .

அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்விகளுக்கான பதில் இன்னும் கிடைத்தபாடில்லை.

எளிமை என்றால் அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அதுதான் க.வே.பாலகுமார்.
.
ஆர்ப்பரிக்காத அரசியல்.....

எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத பெருந்தன்மை....

இந்தியப் பிரதமரையே முதல் நாள் சந்தித்துவிட்டு வந்தாலும் மறுநாள் ஒரு ஓட்டை சைக்கிளில் கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றிவரும் எளிமை.....

Where is KV Balakumar?

இதுதான் தோழர் பாலா.
.
எனக்கும் அவருக்குமான பாசப்பிணைப்பு ஏற்பட்டு ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது என்பதெல்லாம் பிற்பாடு ஆறுதலாகக் கதைக்க வேண்டிய சமாச்சாரங்கள்.
.
ஆனால்....

மிகச் சரியாக எட்டு வருடங்கள் முன்பு தனது மகன் சூரியதீபனுடன் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அவர் விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாயின.
.
அவர் எங்கு கொண்டுசெல்லப்பட்டார்?

எந்த முகாமில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்கிற தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

சிங்கள அரசின் புனர்வாழ்வு அமைச்சரோ அவர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டார் என்று அடித்துச் சத்தியம் செய்தார்.

Where is KV Balakumar?

ஆனால் ஒரு புகைப்பட ஆதாரத்தினை வெளியிட்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் பிரான்சிஸ் ஹாரிசன்.
.
அந்தப் படம்தான் பாலகுமார் தனது மகனுடன் ராணுவம் சுற்றியிருக்க கையில் கட்டுடன் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படம்.
.
அவரோடு யோகி, கவிஞர் புதுவை ரத்தினதுரை ஆகியோர் சரணடைந்திருந்தாலும் ஆதாரம் சிக்கியிருப்பது இவர் ஒருவருடையதுதான். பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் படத்தோடு எண்ணற்ற கேள்விகள் எழுப்பினாலும் வாய் திறக்காமல் மெளனம் சாதிக்கிறது இலங்கை அரசு.
.
அதைவிட அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பஷீர் சேக்தாவூத் தனது அரசியல் ஆசான் பாலகுமாரையும் அவரது மகனையும் கண்டுபிடித்து தருமாறும் இதில் தனிப்பட்ட கவனத்தை செலுத்துப்படியும் இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மிக அண்மையில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
.
நம்முன் உள்ள ஏக்கமெல்லாம் மண்ணை மீட்க தம்மைத் தொலைத்துக் கொண்ட பாலகுமாரும் சரணடைந்த மற்ற போராளிகளும் எப்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள்? என்பதுதான்.
.
உலகத்தின் மனசாட்சி தன் மெளனத்தைக் கலைக்குமா?

இவ்வாறு பாமரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Writer Pamaran posted in his Face Book Page on missing Senior LTTE leader KV Balakumar.
Please Wait while comments are loading...