தினகரனுக்கு ரூ.50 கோடி கொடுத்தது திருச்சி தொழிலதிபர்?
இரட்டை இலை சின்னத்தை பெற தினகரனுக்கு ரூ.50 கோடி தொகையை கொடுக்க முன் வந்தது திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் என்று டெல்லி போலீஸாருக்கு துப்பு கிடைத்துள்ளது.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற தினகரனுக்கு ரூ.50 கோடி தொகையை வழங்க முன் வந்தது திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் என்று டெல்லி போலீஸாருக்கு துப்பு கிடைத்துள்ளது. இதனால் அவரை தூக்கவும் டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக புரோக்கர் சுகேஷ் சந்திரா, தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனை 5 போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதித்தார்.
அதன்படி சுகேஷிடம் கைப்பற்றப்பட்ட ரூ.1.30 கோடி பணத்தை ஹவாலா கும்பல் மூலம் கைமாற்றப்பட்டது குறித்து விசாரணை நடத்த டிடிவி தினகரன், நண்பர் மல்லிகார்ஜுனன் ஆகியோருடன் டெல்லி போலீஸார் சென்னைக்கு நேற்று வந்தனர். பெசன்ட்நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட தினகரனிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.
அதன்பின்னர் அவர் அங்கிருந்து பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு மல்லிகார்ஜூனா என்ற மல்லியுடன் அழைத்து செனறனர். அங்கு தினகரன், மனைவி அனுராதா, மல்லி ஆகியோரிடம் போலீஸார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

மல்லி வீட்டில்...
அதைத் தொடர்ந்து அண்ணா நகரில் உள்ள மல்லியின் வீட்டிலும் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் தமிழகத்தில் தினகரன் எங்கெங்கு அடிக்கடி செல்வாரோ அங்கெல்லாம் போலீஸார் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தோழி லைனா
தினகரனின் நெருங்கிய தோழி லைனா திருவல்லிக்கேணியில் இருக்கிறாராம். அவரது வீட்டிலும் கூட டெல்லி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

நெருங்கியது...
இந்நிலையில் இந்த வழக்கில் தினகரனுக்கு ரூ.50 கோடி கொடுக்க முன்வந்த திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் குறித்த ரகசிய தகவல்களை போலீஸார் சேகரித்து வைத்துள்ளனர். இந்த வழக்கில் சுகேஷும், தினகரனும் பேரம் குறித்து பேசிய ஆடியோ பதிவுகள் இருந்தாலும் அதை உறுதிப்படுத்த திருச்சி தொழிலதிபரை பிடிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

முக்கிய குற்றவாளி
ஹவாலா மூலம் டெல்லிக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு முன்னர் தினகரனுக்கு பதிலாக இந்த தொழிலதிபர் பணத்தை ஏற்பாடு செய்வதாக தெரிவித்திருந்ததால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவர் கருதப்படுகிறார். மேலும் இதில் பல்வேறு தமிழக அமைச்சர்களும் சிக்குவர் என்று தெரிகிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications