என்னை கேள்வி கேட்க உரிமையில்லை.. வாக்காளர்களைப் பார்த்து கருணாஸ் எகத்தாளப் பேச்சு
எனக்கு ஓட்டுப்போடாதவர்களுகு என்ன கேள்வி கேட்க உரிமையில்லை என நடிகர் கருணாஸ் பேசியுள்ளார்.
சென்னை: தனக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு தன்னை கேள்வி கேட்க உரிமையில்லை என நடிகர் கருணாஸ் பேசியுள்ளார். அவரின் இந்த எகத்தாளப் பேச்சு வாக்காளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா தரப்பு ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாக சென்னை கமிஷனர் ஆபிஸில் புகார் அளித்தார். பின்னார் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது திருவாடனை தொகுதியில் தனக்கு எதிராக 2 லட்சம் பேர் உள்ளதாக கூறினார். அதில் தனக்கு ஓட்டு போட்டவர்கள் 75000 பேர்தான் என்றும் தனக்கு ஓட்டு போடாதவர்களுக்கு தன்னை கேள்வி கேட்க உரிமையில்லை என்றும் கருணாஸ் தெரிவித்தார்.
தான் தைரியமாக எதையும் நேரடியாக பேசுபவன், எனவே என்னைப்பற்றி அவதூறாக பரப்புவதை நம்ப வேண்டாம் என்றும் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கேட்டுக் கொண்டார்.
ஏற்கனவே கருணாஸ் சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் திருவாடனை தொகுதி மக்கள் கொதிப்பில் உள்ளனர். இந்நிலையில் கருணாஸின் இந்த பேச்சு அவரது சொந்த தொகுதி மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த வாக்காளர்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கின் போது செல்பிக்கு போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் என்பது நினைவுகூறத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications