உயர்நீதிமன்றத்துக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்கள்.. ஆவேசமான நீதிபதி கிருபாகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்களுக்கு யார் அதிகாரிம் தந்தது என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆசிரியர் சங்க அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது எனவும் நீதிபதி கிருபாகரன் கேட்டுள்ளார்.

ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்த 42 மாணவர்கள் பெயிலாக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பள்ளிக்கு செல்லாமல் முறைகேடு செய்பவர்கள் ஆசிரியர் சங்கங்களை தவறாக பயன்படுத்துவதாக கூறியிருந்தார்.

who gave rights to govt teachers association for protest against High court: Justice Kirubakaran

இதையடுத்து ஆசிரியர் சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரனுக்கு எதிராக போராட்டம் அறிவித்திருந்தன. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தமக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். உயர்நீதிமன்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்களுக்கு யார் அதிகாரம் தந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

365 நாட்களில் 160 நாட்கள் கூட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக்கு செல்வதில்லை என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
ஆசிரியர் சங்க அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது எனவும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai High court justice Kirubakaran condemns govt teachers association. He asked who gave rights to govt teachers association for protest against High court.
Please Wait while comments are loading...