எம்ஜிஆரை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது.. இதுதான் அதிமுக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை உருவாக்கி ஆட்சியில் அமர வைத்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை யாருக்குத் தெரியும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது அதிமுகவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 30ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் தொடக்க விழா வரும் 30ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.

அதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று முன்தினம் மதுரையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், விழாவுக்கு மற்ற மாநில முதல்வர்களை அழைப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த சீனிவாசன், "வெளிமாநில முதல்வர்கள் யாருக்கு, எம்.ஜி.ஆரை தெரியும்" என்று தெரிவித்து அங்கிருந்த அதிமுகவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பி.ஹெச். பாண்டியன்

பி.ஹெச். பாண்டியன்

இந்த நிலையில். சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் பேட்டியளித்தார்.

எம்.ஜி.ஆரை யாருக்குத் தெரியும்?

எம்.ஜி.ஆரை யாருக்குத் தெரியும்?

அப்போது அவர் கூறுகையில், " எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப் போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியானது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஜி.ஆரை, இந்திய அளவில் யாருக்கும் தெரியாது என கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.

பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.

உலகம் முழுவதும் தெரிந்த, ‘பாரத ரத்னா' பட்டம் பெற்ற எம்.ஜி.ஆரை யாருக்கும் தெரியாது என்று கூறியிருப்பது அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாங்களும் கொதித்துப் போய் இருக்கிறோம்.

கட்சியை உருவாக்கியவர்

கட்சியை உருவாக்கியவர்

அ.தி.மு.க.வை நிறுவியவரே எம்.ஜி.ஆர். தான். இன்று 37 எம்.பி.க்களை பெற்று அகில இந்திய அளவில் 3-வது பெரிய கட்சியாக இருப்பதற்கு காரணம் அவர்தான்.

எம்.ஜி.ஆர். பெயருக்கு களங்கம்

எம்.ஜி.ஆர். பெயருக்கு களங்கம்

அவரது சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திண்டுக்கல் சீனிவாசன் சட்டசபைக்கு உள்ளே செல்ல தகுதியற்றவர். எனவே, எம்.ஜி.ஆரின் பெயருக்கு களங்கம் விளைவித்த திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும்.

தடுப்புகளை முதல்வர் அகற்ற வேண்டும்

தடுப்புகளை முதல்வர் அகற்ற வேண்டும்

எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்குள் செல்ல முடியாமல் இரும்புத் தடுப்புகள் போடப்பட்டுள்ளன . அதனால், ஏழை, எளிய மக்கள் உள்ளே செல்ல முடியவில்லை. உடனடியாக அந்த இரும்பு தடுப்புகளை அகற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Dindigul Srinivasan got up in a new controversy. He asked who is MGR and who know him, people shocked.
Please Wait while comments are loading...