குற்றாலத்தில் காத்திருந்த எமன்..அருவியில் அடங்கிய அஸ்வின்! கணிக்க முடியாதது ஏன்? இது தான் பிரச்சினை!
தென்காசி: நேற்று பிற்பகல் பழைய குற்றாலம் பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கினால் திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக பலியானான். இந்நிலையில் விபத்து நிகழ என்ன காரணம்? வெள்ளப்பெருக்கு குறித்து முன்னரே அறிய முடியாத நிலை ஏன்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் பழைய குற்றால பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கினால் திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளப்பெருக்கில் சிக்கி பரிதாபமாக பலியானான். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுவன் பலி: தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியான அஸ்வின் நெல்லை மாநகரப் பகுதியான என்ஜிஓ காலனியில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பு முடித்து 12ஆம் வகுப்புக்குச் செல்ல உள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால், மூன்று நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் மேலகரத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். உறவினர்கள் அஸ்வினை அழைத்துக் கொண்டு பழைய குற்றாலத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
குளிக்க தடை: நேற்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் குறைந்து தற்போது பழைய குற்றால அருவியில் நீர்வரத்து சீராக உள்ளது.நீர்வரத்து குறைந்த போதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் தற்போது பழைய குற்றால அருவி பகுதியில் பொதுமக்கள் செல்லாத வண்ணம் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ள அபாயம்: வருகின்ற மே 21 ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் குறைந்து தற்போது பழைய குற்றால அருவியில் நீர்வரத்து சீராக உள்ளது. நீர்வரத்து குறைந்த போதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
21ஆம் தேதி வரை தடை: இதன் காரணமாக தற்போது பழைய குற்றால அருவி பகுதியில் பொதுமக்கள் செல்லாத வண்ணம் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற மே 21 ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்?: இந்நிலையில் வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே அறியாதது ஏன் என அதிகாரிகளிடம் கேட்டபோது, மற்ற அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதனை கண்காணித்து எச்சரிக்கை செய்ய முடியும். பழைய குற்றாலம் வனப்பகுதியும் ஐந்தருவி வனப்பகுதியும் சமதளமான பாதையில் இல்லை.. மேலும் தனியார் தோட்டங்கள் இல்லாத பகுதிகளாகும். இதன் காரணமாகவே அங்கு கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவது கண்டறியப்பட முடியாமல் இருந்து வருகின்றது
கணிக்க முடியாது: அதே சமயம் ஐந்தருவி பகுதியில் வனத்துறையினுடைய ஆலோசனையின் படி அவ்வப்போது குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. செண்பக தேவி நீர் அருவி பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டுள்ளதால் அங்கு வெள்ளம் வருவது உடனடியாக தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. அங்கு இதேபோன்று பழைய குற்றால பகுதியில் வனத்துறை சார்பில் எந்தவிதமான சோதனை சாவடிகளோ, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படாததன் காரணமாக வெள்ளம் ஏற்படுவது கண்டறியப்பட முடியாத சூழலில் உள்ளது. இதனால் தான் வெள்ளப்பெருக்கை கண்டறிய முடியவில்லை.
எச்சரிக்கை விடுக்கப்பட்டது: இருந்த போதும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 17ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மேல் கன மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாக வனத்துறை சார்பில் குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து குற்றாலம் போலீசார் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவி ஆகிய இரண்டு பகுதிகளிலும் குறைவாக கொட்டிக் கொண்டிருந்த குற்றாலம் அருவியிலும், குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
மக்கள் அலட்சியம்: இதன் தொடர்ச்சியாக சுமார் 15 நிமிடத்தில் குற்றாலம் பேரருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டு பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்ட துவங்கியது. சரியான நேரத்தில் வனத்துறையினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் குற்றாலம் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அதற்கு முன்னதாகவே பழைய குற்றாலத்திலும் மக்களை முழுமையாக அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
வனத்துறை வசம் குற்றாலம்: இதன் காரணமாகத்தான் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவி மற்றும் அந்தப் பகுதிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டி பொதுப்பணி துறையினருக்கு குற்றாலம் வனச்சரகம் சார்பில் அறிவிப்பானை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 15 தினங்களுக்குள் குற்றாலம் வனத்துறையினுடைய கட்டுப்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிற்றருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. போன்று பழைய குற்றாலம் அருவியும் வனத்துறையினுடைய கட்டுப்பாட்டிற்கு வருகிறது. இதன் மூலம் அங்கு கண்காணிப்பு கோபுரம் மற்றும் சென்சார் அமைத்தால் வரும் காலங்களில் விபத்து நேரிடுவதை தவிர்க்க முடியும் என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications