• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்ணிற்கு விருப்பம் இல்லையென்றால் கொல்லத்துணிவது சரியா?... திருந்த வேண்டியது யார்?

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

  மாணவி அஸ்வினியின் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது- வீடியோ

  சென்னை : பெண்ணிற்கு விருப்பம் இல்லையென்று தெரிந்ததும் தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் வளரக் காரணம் யார்? இளைஞர்களின் இந்த மன நிலை மாற செய்ய வேண்டியது என்ன?

  தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கதையாகி வருகின்றன. நுங்கம்பாக்கத்தில் காலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெண் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  இதுமட்டுமின்றி சமீப காலமாகவே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிலும் காதல் என்ற போர்வையில் அரங்கேறும் கொடுமைகள் சொல்லி மாளாதவையாக இருக்கின்றன. பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, திருமணம் முடிந்த பெண் என யாராக இருந்தாலும் இதே நிலை தான்.

  ஆசிட் வீச்சுக்கு பலியான யமுனா

  ஆசிட் வீச்சுக்கு பலியான யமுனா

  கடந்த பிப்ரவரி மாதத்தில் சென்னை ஆதம்பாக்கத்தில் பணிக்கு சென்ற 30 வயது பெண் யமுனா தான் வேலை பார்த்த பரிசோதனை மைய உரிமையாளரால் ஸ்பிரிட் ஊற்றி எரிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 5 நாள் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தார். உயிரிழந்த யமுனாவிற்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

  மாணவி பெட்ரோல் ஊற்றி எரிப்பு

  மாணவி பெட்ரோல் ஊற்றி எரிப்பு

  மதுரையில் 9ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்த பாலமுருகன் என்ற இளைஞன், மாணவி மறுப்பு சொன்னதால் பள்ளி வாசலில் வைத்தே அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தான். இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.

  சென்னையில் பட்டபகலில் நடந்த கொலை

  சென்னையில் பட்டபகலில் நடந்த கொலை

  இன்று சென்னை கே.கே. நகரில் பட்டபகலில் கல்லூரி வாசலில் வைத்து காதலை ஏற்காத பெண் அஸ்வினியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான் அழகேசன். 6 மாதத்திற்கு முன்பு வீடு புகுந்து கட்டாய தாலி கட்டியதில் படிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் கல்லூரி திரும்பியுள்ள அஸ்வினி, அழகேசனின் தொந்தரவுகளை வீட்டிற்கு தெரியப்படுத்தவில்லை என்று தெரிகிறது.

  அஸ்வினி யாருக்கும் கிடைக்கக் கூடாது

  அஸ்வினி யாருக்கும் கிடைக்கக் கூடாது

  தனக்கு கிடைக்காத அஸ்வினி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கத்தியுடன் மதுபோதையில் வந்த அழகேசன், அந்த ஒன்றும் அறியா குழந்தை முகமான அஸ்வினியை துணிந்து கழுத்தறுத்து கொன்றிருக்கிறான். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அஸ்வினி அதே இடத்தில் உயிர் பிரிந்துள்ளார்.

  முற்றிப் போய்க்கொண்டிருக்கும் மனநோய்

  முற்றிப் போய்க்கொண்டிருக்கும் மனநோய்

  பெண்கள் தங்களது விருப்பத்திற்கு இணங்காவிட்டால் அவர்களை கொன்றுவிட வேண்டும் என்பது சமுதாயத்தில் முற்றிப் போய் கொண்டிருக்கும் மனநோயாக உள்ளது. சினிமாக்களை பார்த்து தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று இளைஞர்கள் வளர்த்துக் கொள்ளும் கொடூரத்தனம் மாற வேண்டும்.

  ஆண்கள் என்ற அகம்பாவம்

  ஆண்கள் என்ற அகம்பாவம்

  ஆண், பெண் சமம், ஆண் குழந்தைக்கு மட்டும் கேட்டது எல்லாமே கிடைத்து விட வேண்டும் என்ற வளர்ப்பு முறையில் பெற்றோர் மாற்றம் செய்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். தான் தான் மேல் என்ற எண்ணத்தில் இருக்கும் ஆண் தன்னை ஒரு பெண் நிராகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் எந்த எல்லைக்கும் போகலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே சமீபத்திய சம்பவங்களே இதற்கு சான்றாக இருக்கின்றன.

  மனம் விட்டு பேச வேண்டும்

  மனம் விட்டு பேச வேண்டும்

  ஆண் மனிதத்தன்மையில்லாதவன் என்ற சூழலுக்கு தள்ளியதற்கு பெற்றோருக்கும் இந்த சமுதாயத்திற்கும் மிகப்பெரிய பங்கு உள்ளது. பெண்பிள்ளைகளை மட்டும் சரியாக வளர்த்தால் போதாது ஆண்களுக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பிரச்னைகளை சரியாக அணுகும் விதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். சிறு பிள்ளைகளாக இருந்தாலும் வளர்ந்துவிட்ட இளைஞர்களானாலும் அவர்களுடன் நட்புடன் பழகி அவர்களின் மனநிலையை எப்போது கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

  English summary
  Who is responsible for girls killed arrogantly by youths because of one side love?What is the role of society in this threatening issue?
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X