For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தற்காலிக முதல்வர்... பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், தம்பிதுரை? ரெக்க கட்டி பறக்கும் புது லிஸ்ட்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் தற்காலிக முதல்வர் ஒருவர் நியமிக்கப்படுவது உறுதி என கூறப்படுகிறது. இந்த தற்காலிக முதல்வர் பதவிக்கு பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் மற்றும் தம்பிதுரை ஆகியோர் பெயர்களும் அடிபடுகிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்பது சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் அறிவிப்பு. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்காலிக முதல்வர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஓபிஎஸ், எடப்பாடி

ஓபிஎஸ், எடப்பாடி

தமிழக ஆளுநரை நேற்று மூத்த அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால் இந்த இருவரில் ஒருவர் தற்காலிக முதல்வர் அல்லது துணை முதல்வர் என கூறப்பட்டது.

பண்ருட்டி, பொன்னையன்,

பண்ருட்டி, பொன்னையன்,

தற்போது இந்த பட்டியலில் எம்.ஜி.ஆர். காலத்து அமைச்சர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், சி. பொன்னையன் ஆகியோரது பெயர்களும் அடிபடுகிறது. அத்துடன் லோக்சபா துணை சபாநாயகரான தம்பிதுரையின் பெயரும் இந்த பட்டியலில் அடிபடுகிறது.

தம்பிதுரை

தம்பிதுரை

அதே நேரத்தில் தம்பிதுரை உடனே முதல்வராக பதவி ஏற்க முடியாத நிலையும் உள்ளது. லோக்சபா துணை சபாநாயகராக உள்ள தம்பிதுரையை விடுவிப்பதில் உள்ள சட்ட நடைமுறைகளால் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

வேலுமணி, தங்கமணி

வேலுமணி, தங்கமணி

மேலும் அமைச்சர் வேலுமணி, அமைச்சர் தங்கமணி ஆகியோர் பெயர்களும் தற்காலிக முதல்வர் ரேஸில் அடிபடுகிறது. இப்படி தற்காலிக அல்லது துணை முதல்வரை அமைக்காமல் அமைச்சர்கள் குழு ஒன்றை அமைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

English summary
Senior ADMK leaders Panruti Ramachandran, Ponnaiyan and Senior cabinet ministers O Panneerselvam and Edappadi K Palaniswami may become interim Chief Minister of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X