For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா... தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ராஜினாமாவைத் தொடர்ந்து அக்கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் முதல் இடத்தில் பீட்டர் அல்போன்ஸ் பெயர் அடிபடுகிறது. அடுத்தபடியாக வர்த்தக பிரிவு தலைவரான வசந்தகுமார், திருநாவுக்கரசர், செல்லக்குமார் எம்.எல்.ஏ., அகில இந்திய பொது செயலரான ஜெயக்குமார், ஆகியோர் பெயரும் முன்னிலை பட்டியலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளதாகவும், ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி திரும்பியதும், ராஜினாமா கடிதம் குறித்து முடிவெடுப்பார் என சத்தியமூர்த்தி பவன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளங்கோவன் ராஜினாமா செய்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இளங்கோவனால் பாதிக்கப்பட்ட கோஷ்டி தலைவர்கள் பலரும் கட்சி தலைமைக்கு பல்வேறு புகார்களை தெரிவித்தனர். கட்சியின் மேலிட நெருக்கடியால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது .

பலமான தொகுதிகள்

பலமான தொகுதிகள்

காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளான நிலக்கோட்டை, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, போன்ற பலமான தொகுதிகளை தேர்வு செய்யாமல் திமுக விடம் விட்டு கொடுத்ததும் கட்சி மேலிடத்திற்கு அதிருப்தி ஏற்படுத்தியது.

கோஷ்டி தலைவர்கள்

கோஷ்டி தலைவர்கள்

மேலும் கோஷ்டி தலைவர்களாக சிதம்பரம், தங்கபாலு , கிருஷ்ணசாமி, வசந்தகுமார், ஆகியோரை ஒருங்கிணைத்து செல்லவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு கோஷ்டி தலைவர்களையும் முறைப்படி அழைக்கவில்லை. மேலும் கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்காமல் கைவிட்டதும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

குஷ்புவின் பிரச்சாரம்

குஷ்புவின் பிரச்சாரம்

கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு, தேர்தல் பிரசாரத்தில் சன்மானங்கள் வாங்க கூடாது, ஆனால் அவரும் ஒரு லட்ச ரூபாய் சன்மானம் பெற்றதை கண்டிக்காமல் ஊக்குவித்ததாக கூறப்படுகிறது.

அடுத்த தலைவர் யார் ?

அடுத்த தலைவர் யார் ?

இளங்கோவனின் ராஜினாமாவைத் தொடர்ந்து தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் முதல் இடத்தில் பீட்டர் அல்போன்ஸ் பெயர் அடிபடுகிறது. அடுத்தபடியாக திருநாவுக்கரசர், வர்த்தக பிரிவு தலைவரான வசந்தகுமார், செல்லக்குமார் எம்.எல்.ஏ.அகில இந்திய பொது செயலரான ஜெயக்குமார், ஆகியோர் பெயரும் முன்னிலை பட்டியலில் உள்ளது.

பீட்டர் அல்போன்ஸ்

பீட்டர் அல்போன்ஸ்

பீட்டர் அல்போன்ஸ் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர். இவர் கருணாநிதியுடன் மிக நெருக்கமான நட்புறவை கொண்டவர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஜி.கே.வாசன் தொடங்கிய போது அவருடன் சென்றவர். சட்டசபை தேர்தல் நேரத்தில் மக்கள் நலக்கூட்டணியில் வாசன் இணைந்ததால் அதிருப்தியடைந்து மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.

வசந்தகுமார் - திருநாவுக்கரசர்

வசந்தகுமார் - திருநாவுக்கரசர்

வர்த்தகப்பிரிவு தலைவரான வசந்தகுமார் தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு நெருக்கமானவர் திருநாவுக்கரசர் எனவே இவரை காங்கிரஸ் தலைவராக நியமிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள ராகுல்காந்தி நாடு திரும்பிய பின்னர் அடுத்த தலைவர் யார் என்பது தெரியவரும்.

English summary
Peter Alphonse, S Thirunavukkarasar, H Vasantha kumar are some of the leading leaders to be tipped for the president post of TNCC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X