ரஜினி முடிவை உலகமே எதிர்ப்பார்க்கிறதாம்... சொல்வது வைகோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து வைகோ பேட்டி- வீடியோ

  மதுரை: ரஜினி அரசியலில் பங்கேற்பது அவரின் ஜனநாயகம் உரிமை என்று கூறியுள்ள வைகோ, ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை உலகமே எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

  ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திர மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. ரஜினி தனது நிலைப்பாட்டை ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் கடைசி நாளான 31ம் தேதி அறிவிப்பதாக கூறியிருந்தார்.

  Whole world is expecting the rajini decision about political entry says vaiko

  இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும், கட்சித் தலைவர்களும் ரஜினியின் நிலைப்பாட்டை தெரிந்துக்கொள்ள பெரும் ஆர்வத்தில் உள்ளனர். ஒரு சார்பினர் அவர் கட்சித்தொடங்குவார் என்றும், மற்றோரு சார்பினர் அவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்றும், மற்றும் சிலர் தினகரனுக்கு அவர் ஆதரவு தெரிவிப்பார் என்று பல விவாதங்கள் போயிக்கொண்டிருக்கின்றனர்.

  இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தற்போது யாரும் வெளிப்படையாக வரவேற்காத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதனை வரவேற்றுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை என்றும், அவரின் நிலைப்பாட்டை அறிந்துக்கொள்ள அனைவரும் ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

  வைகோவின் தமிழுக்கு நான் அடிமை என இளையராஜாவின் திருவாசகம் கேசட் வெளியீட்டு விழாவில் ரஜினி கூறியிருந்தது, அரசியலையும் தாண்டி ரஜினியுடன் வைகோ நல்ல நட்பில் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் வைகோவின் இந்த ஆதரவு புதிய அரசியல் கோணத்தை உண்டு செய்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Whole world is expecting the rajini decision about political entry says vaiko. As no leaders have outspokenly admitted rajini political entry, vaiko's this support has given a new dimension

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற