For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வும் குற்றவாளின்னு சொல்லிட்டாங்களே.. பிறகு ஏன் அதிமுகவினர் கொண்டாடுகின்றனர்???

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அதிமுகவினர் அதாவது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கொண்டாடுவது மக்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளது. காரணம், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஜெயலலிதாவும் கூட குற்றவாளிதான்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாதான் முக்கியக் குற்றவாளி. அடுத்த நிலையில்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உள்ளனர். தற்போது ஜெயலலிதா மறைந்து விட்டார்.

இருப்பினும் இன்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி நான்கு பேருமே குற்றவாளிகள்தான். நான்கு பேருக்கும் விதிக்கபப்ட்ட அபராதத்தையும் ஒரு பைசா கூட குறைக்காமல் உறுதி செய்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

ஜெயலலிதாவும் குற்றவாளியே

ஜெயலலிதாவும் குற்றவாளியே

அந்த வகையில் ஜெயலலிதாவும் கூட குற்றவாளிதான். அவர் செய்தது குற்றம்தான் என்பதே இந்த தீர்ப்பின் முக்கிய சாராம்சம். ஆனால் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடி வருகின்றனர்.

குத்தாட்டம் பட்டாசு லட்டு!

குத்தாட்டம் பட்டாசு லட்டு!

> பட்டாசு வெடிக்கின்றனர். குத்தாட்டம் போடுகின்றனர். லட்டு கூட கொடுத்து சந்தோஷிக்கின்றனர். இவர்கள் அடிப்படை விஷயத்தையே மறந்து விட்டனர்.

கோபம் முழுவதும் சசி மீதே

கோபம் முழுவதும் சசி மீதே

தங்களது தலைவராக திகழ்ந்த ஜெயலலிதாவும் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்ததை அவர்கள் மறந்து விட்டனர். அவர்களது முக்கிய சந்தோஷமே, சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதாக மட்டுமே உள்ளது. இதைத்தான் அவர்கள் முக்கியமாக கருதுவதாக தெரிகிறது.

ஆச்சரியம்தான்

அதேசமயம், ஜெயலலிதாவும் குற்றவாளி என்பதும் இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சம் என்பதை அவர்கள் மறந்து விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது ஆச்சரியம்தான்.

English summary
Jayalalitha is also convictec in DA case, but ADMK cadres are celebrating alll over the state without knowing the judgement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X