For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜோசஃப் விஜய் என்று நான் சொன்னதுக்கு காரணம் இதுதான்- எச்.ராஜாவின் 'அடடே' வியாக்யானம்

நடிகர் விஜய்யை ஜோசஃப் விஜய் என்று அழைத்ததற்கான காரணத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜோசஃப் விஜய் என்று நான் சொன்னதுக்கு காரணம் இதுதான்- எச்.ராஜாவின் அடடே வியாக்யானம்

    சென்னை: மெர்சல் படத்தின் மீதான விமர்சனத்தின்போது நடிகர் விஜய்யை ஜோசஃப் விஜய் என்று அழைத்ததற்கான காரணத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    தீபாவளிக்கு வெளியான மெர்சலுக்கு எத்தனை எதிர்ப்புகள். அனைத்தும் பாஜகவிடம் இருந்து வரும் விமர்சனங்கள். இந்த படத்தில் விஜய் கூறிய சம்பவங்கள் அனைத்தும் வட மாநிலங்களில் உண்மையாக நடந்து அவற்றை செய்தியாக நாம் பார்த்துள்ள போதிலும் இதை ஏற்க மறுத்து மருத்துவ சங்கங்களும் போர்க் கொடி உயர்த்தியுள்ளார்.

     why calls Vijay as Joseph Vijay, H.Raja explains here

    மெர்சலுக்கான குடைச்சல் இவ்வாறிருக்க, தற்போது ராஜாவுக்கு எதிராக பலரின் கண்டன கணைகளை எய்துள்ளனர். மெர்சல் படத்தின் மீதான விமர்சனத்தின் போது ஜோசஃப் விஜய்யின் மோடி மீதான கோபமே மெர்சல் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்கள் முதல் டிவி விவாதங்கள் வரை படத்துக்கு மதச்சாயம் பூசுவது ஏன் என்று ராஜாவை வறுத்தெடுக்கின்றனர்.

    புதிய தலைமுறை தொலைகாட்சி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தீபாவளி பண்டிகையின் போது சர்வதேச கிறிஸ்துவ மிஷனரிஸின் ஒரு தொலைகாட்சி சேனலில் தீபாவளி அவசியமா அல்லது ஆடம்பரமா என்று நடத்தியது.

    இதே போன்று கிறிஸ்துமஸ் தேவையா என்று விவாதம் நடத்த இவர்களுக்கு முதுகெலும்பு இருக்குமா, துணிச்சல் இருக்குமா, இதை தட்டிக் கேட்டால் நான் மதவாதியா. அவர்களின் செயல்தான் மதவாதம். அதுபோல் மெர்சல் படத்தில் கோவில் கட்டுவதற்கு பதிலாக என்று பேசியது இந்துக்களின் மதஉணர்வை புண்படுத்தும் செயல். அதனால் அவரது உண்மை நிறம் என்ன என்பதை சொல்ல நினைத்தேன், அதை சொல்லிவிட்டேன் என்றார் ராஜா.

    English summary
    BJP National Secretary H.Raja explains why he calls Actor Vijay as Joseph Vijay in an interview.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X