Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சித்தி மகள்".. மெல்ல உருவான ஆசை கோட்டை.. ஆட்டோவிலேயே சுருண்ட ஸ்கூல் டீச்சர்.. அடகடவுளே

சித்தி மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்டதுடன், அந்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார் இளைஞர்

Subscribe to Oneindia Tamil

அந்தியூர்: ஓடும் ஆட்டோவில் பெண்ணை கத்தியால் கழுத்தறுத்த நபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சந்திரா காலனியை சேர்ந்தவர் ராஹிலா.. 25 வயதாகிறது.. இவர் ஒரு பிஎஸ்சி பட்டதாரி.. அந்தியூர் அடுத்த மைக்கேல் பாளையத்தில் ஒரு ஸ்கூலில் வேலை பார்த்து வருகிறார்.

அந்த ஸ்கூலில் ஸ்போக்கன் இங்கிலீஷ் டீச்சராக பணிபுரிகிறார்.. அந்தியூர் புதுப்பாளையம் பகுதியிலேயே தோழியுடன் ரூம் எடுத்து தங்கி வந்துள்ளார்.. அங்கிருந்து தினமும் ஸ்கூலுக்கு பஸ்சில் போய் வருவார்.

 வற்புறுத்தல்

வற்புறுத்தல்

இந்நிலையில், நேற்று முன்தினம் ராஹிலாவை அவரது பெரியம்மா மகன் ஜீவா சந்திக்க வந்திருந்தார்.. ஜீவாவுக்கு 35 வயதாகிறது.. இருவரும் பேசிக்கொண்டே, ராஹிலா தங்கியிருந்த பகுதியில் இருந்து ஆட்டோவில் அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் சென்றிருக்கிறார்கள்.. ஆட்டோவில் சென்றபோது, ஜீவா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஹிலாவை வற்புறுத்தியதாக தெரிகிறது.. இதை ராஹிலா மறுக்கவும், ஆத்திரம் அடைந்த ஜீவா, கையோடு கொண்டு சென்றிருந்த கத்தியால், ராகிலாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.. இதில் ராஹிலாவுக்கு ரத்தம் கொட்டியுள்ளது..

 அலறிய ராஹிலா

அலறிய ராஹிலா

இதை பார்த்து ஆட்டோ டிரைவர் பதறிப்போய் விட்டார்.. வலியால் அலறி துடிப்பதை பார்த்து, என்ன செய்வதென்றே புரியாத நிலையில், ஆட்டோவை போலீஸ் ஸ்டேஷன் நோக்கி ஓட்டினார்... இதை பார்த்ததும், ஜீவா ஆட்டோவில் இருந்து குதித்து தப்ப முயன்றார்... ஆனால், ஆட்டோ டிரைவர் சத்தம் போடவும், அந்த பகுதி மக்கள் விரட்டிச்சென்று, ஜீவாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்... பிறகு ராஹிலாவையும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.. ராஹிலாவுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது..

 சித்தி மகள்

சித்தி மகள்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சொல்லும்போது, நீலகிரி மாவட்டம் கூடலூர் முக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா.. எம்ஏ பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படித்துள்ளார்.. லண்டனில் தனியார் கப்பல் நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக கைடு வேலை பார்த்து வந்துள்ளார்.. ஜீவாவின் அம்மா ஜெரினா பேகமும், ராஹிலாவின் அம்மா சமீமாவும் அக்கா - தங்கைகள்.. ஆனால், ஜீவாவின் அம்மா, இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் கொண்டாராம்.. இருப்பினும் ஜீவா, தன்னுடைய சித்தி மகளான ராஹிலாவை முறைப்பெண் என்று நினைத்து காதலித்து வந்துள்ளார்..

 கப்பல்ல வேலை

கப்பல்ல வேலை

கப்பலில் வேலை பார்க்கும்போதே, ராஹிலாவை மனதில் வைத்தே பல கனவு கோட்டைகளை கட்டி வந்துள்ளார்.. ராஹிலாவுக்காகவே, கூடலூர் பகுதியில் ரூ.10 லட்சத்தில் ஒரு வீட்டை வாங்கியிருக்கிறார்.. 20 சென்ட் நிலத்தையும் ராஹிலாவுக்காகவே வாங்கியுள்ளார்... அதற்கு பிறகு, அவரை கல்யாணம் செய்வதற்காக, 3 ஆண்டுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி உள்ளார்.. அப்போதும் ராஹிலாவின் வளமான வாழ்க்கைக்காக சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்று நினைத்து, கடுகு, ஏலம், போன்றவற்றை விவசாயம் செய்து வருகிறார்...

 சின்ன கத்தி

சின்ன கத்தி

தன்னுடைய காதலை, வீட்டில் சொல்லவும், மொத்த பேரும் அதிர்ந்து போயுள்ளனர்.. அதனால், ராஹிலாவிற்கு அவசர அவசரமாக கடந்த 15 தினங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த ஒரு நபருடன் நிச்சயம் செய்திருக்கிறார்கள்.. இந்த விஷயம் தெரிந்துதான், ஜீவா ஆவேசமாகி, அந்தியூருக்கு கிளம்பி சென்றுள்ளார்.. ராஹிலாவை சந்தித்து, கல்யாணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி உள்ளார்.. ராஹிலா அதற்கு மறுக்கவும்தான், கையோடு கொண்டு சென்ற சிறிய கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.. இப்போது ஜீவா கைதாகி ஜெயிலில் இருக்கிறார்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+