என்னது எம்ஜிஆரும் ராசியில்லா ராஜாவா? பிறந்த நாளன்று ராமாவரம் போகாமல் எஸ்கேப்பான தினகரன்!

சென்னை: தம்முடைய பிறந்த நாளில் சென்னை ராமாவரம் எம்ஜிஆர் இல்லத்துக்கு வருகை தருவதாக உறுதியளித்திருந்த தினகரன் திடீரென திருப்பதிக்கு போய்விட்டார். தினகரனின் இந்த திடீர் மாற்றத்துக்கு சுவாரசியமான பின்னணி சொல்லப்படுகிறது.
தினகரனின் பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் நேற்று கோலாகலமாக கொண்டாடினர். இதன் ஒருபகுதியாக சென்னை ராமாவரம் எம்ஜிஆர் கார்டனிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

திருப்பதி போன தினகரன்
இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக தினகரன் முதலில் உறுதி அளித்திருந்தார். ஆனால் திடீரென திருப்பதிக்கு கிளம்பி போனராம் தினகரன்.

சிறைக்கு போன சசி
இது குறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் ஒருவர், ராமாவரம் எம்ஜிஆர் இல்லத்துடன் சசிகலா நெருக்கம் பாராட்டினார். ஆனால் அவருக்கு சிறைவாசம்தான் கிடைத்தது.
|
குழப்பத்தில் தினகரன்
இப்போது தினகரனுக்கும் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எம்ஜிஆர் இல்லத்துக்கு போக வேண்டுமா? என்கிற குழப்பம் அவருக்கு இருந்தது என சுட்டிக்காட்டுகின்றனர்.

எம்ஜிஆர் இல்லம்
அதே நேரத்தில் தாம் மற்றொரு நாள் வருவதாகவும் எம்ஜிஆர் இல்லத்துக்கு உறுதியளித்திருக்கிறார் தினகரன் எனவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். சிறைக்கு போக நேரிடுமோ என்பதாலேயே தினகரன், எம்ஜிஆர் இல்லம் செல்லவில்லை என்றே சொல்லப்படுகிறது.
என்னது எம்ஜிஆரும் ராசியில்லா ராஜாவா?