• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலைச்சாமியை மலை ஏற வைத்தது இந்த பேட்டிதானாம்..!!

By Mathi
|

சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கு அதிமுக ஆதரவு தருமா? இல்லையா? என்ற பரபரப்புக்கு மத்தியில் அதிமுக ஆதரிக்கும் என்ற வகையில் கருத்து தெரிவித்த அக்கட்சி முன்னாள் எம்.பி. மலைச்சாமி அதிரடியாக கட்சியைவிட்டே நீக்கப்பட்டுள்ளார். அவரது நீக்கத்துக்கு காரணமாக சொல்லப்படுவது பிபிசி தமிழோசைக்கு கொடுத்த 4 நிமிட பேட்டிதானாம்.

மத்தியில் புதிய அரசை அமைப்பதற்கு பாஜகவுக்கு அதிமுக ஆதரிக்குமா என்ற கேள்விக்கு ஏ.என்.ஐ. நிறுவனம் அக்கட்சியில் இருந்து ஓரமாக ஒதுங்கி உட்கார்ந்திருக்கும் மலைச்சாமியிடம் பேட்டி வாங்கியது. அதை அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களும் பயன்படுத்தின.

Why Jayalalithaa expels former MP Malaisamy from AIADMK?

அவர் தமது பேட்டியில் மோடி அலை வீசுகிறது. என்று கூறியதுடன் அதிமுக ஆதரவளிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து மலைச்சாமியிடம் பிபிசி தமிழோசை கருத்து கேட்டு ஒளிபரப்பியிருக்கிறது.

இந்த பேட்டியிலும் காங்கிரஸ் அம்மாவுக்கு பிடிக்காது.. அதனால பாஜகவை ஆதரிப்பாங்க என்ற அடிப்படையிலும் தனிப்பட்ட முறையில் மோடி அலை வீசுவதாகவும் மலைச்சாமி 4 நிமிடத்துக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

இதனை அவருக்குப் பிடிக்காத சில எதிர் கோஷ்டி ஐஏஎஸ் அதிகாரிகள் அப்படியே ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுக்க அவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

சர்ச்சைக்குரிய மலைச்சாமியின் பேட்டி இதுதான்:

மலைச்சாமி: நீங்க கற்பனை பண்ற மாதிரி நானும் கற்பனை பண்றேன்.. அதாவது எங்க அம்மாகிட்ட கேட்டீங்கன்னா என்ன சொல்வாங்கன்னு தெரியலை.. அவங்க இன்னைக்கு கொட நாட்டில இருந்து வந்தப்ப பார்த்தப்ப கேட்டாங்கலாம்.. அவங்க என்ன சொன்னாங்களாம்.. 'வெயிட் பார் தி ரிசல்ட்ஸ் ஆப் தி எலக்ஷன்ஸ் "னு சொன்னாங்களாம்.

பிபிசி செய்தியாளர்: ஆனால் தேர்தலுக்கு முன்பே நரேந்திர மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் தேர்தலுக்கு முன்பே பரஸ்பர நல்லுணர்வு.. சினேகிதம்..

மலைச்சாமி: மோடிக்கும் அம்மாவுக்கும் நல்லுணர்வு இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க.. நீங்களும் சொல்றீங்கன்னு நினைக்கிறேன் எனக்கும் அப்படித்தான்னு தோணுது...

பிபிசி செய்தியாளர்; அந்த அடிப்படையில் வைத்துப் பார்த்தால் பாஜகவுக்கு ஆதரவு தேவைப்படும்போது அதிமுக ஆதரவு அளிக்குமா?

மலைச்சாமி: அது வந்த எங்க அம்மாதான் முடிவெடுப்பாங்க. எங்க பார்ட்டியின் டிசிப்ளின்தான் எப்படி இருக்கும்னு உங்களுக்கு தெரியுமே

பிபிசி செய்தியாளர்: உங்களுடைய சொந்த கருத்து எப்படி இருக்கும்?

மலைச்சாமி: என்னுடைய சொந்தக் கருத்து என்னன்னா. மோடி அவ்வளவு சிரமத்தில் இருக்க மாட்டார். மோடி வேவ் இஸ் ஆல்ரெடி ஹிட். அந்த வகையில் மோடிக்கு அகில இந்திய ரீதியில் ஒரு பேரு வரும்.. என்டிஏவும் பிஜேபியும் சேர்ந்து மெஜாரிட்டி வரும்னு எனக்கு தோணுது.

பிபிசி செய்தியாளர்: அப்படியே இருந்தாலும் 272 சீட்டுக்கு மேல் அக்கட்சி பெற்றாலும் வெளியில் இருந்து ஒன்றிரண்டு கட்சிகள் அளிக்கும் ஆதரவை பாஜக எடுத்துக் கொள்ள வேண்டும் என..

மலைச்சாமி: எங்க அம்மாவுக்கு காங்கிரஸ் பிடிக்காது.. அடுத்து வந்து அகில இந்திய அளவில் அக்செப்ட்டபிள் பார்ட்டியாக இருப்பது பிஜேபிதான்

பிபிசி செய்தியாளர்: இருக்கலாம்.. தேர்தலுக்கு முன்பே 3வது அணி என்ற முயற்சியில் ஈடுபட்டீர்கள்..

மலைச்சாமி: அது வந்து அம்மா சொன்னபடி.. பிஜேபிக்கும் மெஜாரிட்டி கிடைக்காம காங்கிரஸுக்கும் மெஜாரிட்டி கிடைக்காம ஒரு தேர்ட் பிரண்ட் வருமா வராதாங்குற நிலையில் அம்மா வில் ப்ளே ஏ வைட்டல் ரோல்

பிபிசி செய்தியாளர்: ஏற்கெனவே மூன்றாவது அணி முயற்சிகளில் இருந்து நீங்கள் வெளியே வந்துவிட்டதால் அந்த கதவு அடைபட்டுவிட்டது என்று சொல்லலாமா?

மலைச்சாமி: அதாவது இன்னிக்கு சூழலில் மோடிக்கு மெஜாரிட்டி கிடைக்கலை.. சிக்கலில் இருக்கார்னு சொன்னா அந்த கதவு அடைக்கலை.. திறந்தே இருக்கும்னு சொல்லலாம்.

பிபிசி செய்தியாளர்க: 98-99 காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தீர்கள்.. பின்னர் கசப்புணர்வுடன் வெளியேறினீர்கள்.. இப்பொழுதும் அந்த மாதிரியான ஒரு கூட்டணியில் சேருவது வெற்றிகரமாக இருக்குமா? எந்த மாதிரி இருக்கும்?

மலைச்சாமி: உங்களுக்கு தெரியாதது அல்ல.. அதாவது அரசியல்ல நேரத்துக்கு நேரம்.. நிமிஷத்துக்கு நிமிஷம் சூழ்நிலை மாறும்.. அப்படிப்பட்ட நிலையில் அன்று எடுத்த நிலைப்பாட்டை இன்று கோட் பண்றது சரியாகப்படலை இன்னைக்குள்ள என்விரான்மெண்ட்ல அம்மா ஒரு அடையாளப்படுத்தப்பட்ட ஒரு தலைவர்னு, டெல்லியில் நான் அடிக்கடி போகிறேன்.. பேசிகிட்டு இருக்காங்க

பிபிசி செய்தியாளர்: மோடி பற்றி சிறுபான்மையினர் மத்தியில் பலவித அச்சங்கள் இருக்கின்றன. அந்த மாதிரி சூழ்நிலையில் திராவிடக் கட்சியான உங்கள் கட்சி அந்த அச்சங்களை உதறிவிதள்ளிவிட்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு ஆதரவு தருவது என்பது எப்படி என கருத்து நிலவுகிறது

மலைச்சாமி: மோடியின் விவாதத்தை கேட்டா அவர் மைனாரிட்டிதான் எனக்கு பிடிக்கும்.. அங்கதான் நிறைய செய்திருக்கேன் சொல்றார் .. மைனாரிட்டிகாரங்களுக்கு மோடி விரோதின்னு பிஜேபிகாரங்க ஒப்புக்கொள்வதும் இல்லை.. பிஜேபிகாரங்க எண்ணமும் அது இல்லை. மொத்தத்தில் மைனாரிட்டியை பகைத்துப்போகக் கூடாது என்பது எல்லோரும் இருப்பாங்க.. அதுல எங்கம்மா குறியா இருப்பாங்க. மைனாரிட்டியையும் பகைக்காம சப்போஸ் மோடியின் கவர்மென்ட்டுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய ஒரு சூழல் வந்தா என்ன என்ன செய்றதுங்கிறதை அம்மா எப்படி பேலன்ஸ் பண்றாங்க அப்படிங்கிறதை வெயிட் பண்ணி பார்க்கனும்

இவ்வாறு அந்த பேட்டியில் மலைச்சாமி கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியை நீங்கள் கேட்க...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
AIADMK general secretary and Tamil Nadu chief minister J Jayalalithaa on Thursday expelled former MP K Malaisamy from the primary membership of the party. His expulsion has come a day after he aired his remarks openly to the media, including BBC Tamilosai, on the possibility of ties between BJP's PM candidate Narendra Modi and Jayalalithaa after the announcement of election results on May 16.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more