சென்னையில் இரவில் மட்டும் ஏன் கன மழை பெய்கிறது? ரமணன் விளக்கம் இது

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் இரவில் மட்டும் மழை பெய்ய காரணம் என்ன? | Oneindia Kannada

  சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இரவில் மட்டும் ஏன் கன மழை பெய்கிறது என்ற கேள்விக்கு சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் பதில் அளித்தார்.

  நேற்று பகலில் சென்னையில் வானம் வெறிச்சோடி கிடந்தது. சூரியன் சுள்ளென சுட்டது. ஆனால் இரவில் கன மழை கொட்டியது. அதிகபட்சமாக மைலாப்பூரில் 30 செ.மீ மழை பெய்தது.

  அதேபோல இன்று பகலிலும் வானம் தெளிவாக காணப்பட்டது. ஆனால் இரவில் ஆங்காங்கு மழை பெய்ய தொடங்கியுள்ளது.

  புயல் வேறு

  புயல் வேறு

  இந்த கணிக்க முடியாத வானிலை நிலவரம் குறித்து ரமணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பதற்கும் புயல் என்பதற்கும் முக்கிய வேறுபாடு என்பதே இதுதான்.

  இயல்பு நிலை

  இயல்பு நிலை

  புயல் உருவானால் அது கரையை கடக்கும் வரை மழை இருக்கும். ஒன்றரை நாளில் புயல் கரையை கடந்துவிடும். அதன்பிறகு புயல் கரையை கடந்த இடத்தில் வானம் தெளிவாக இருக்கும். இயல்பு நிலை உடனே திரும்பிவிடும்.

  இயல்பானது

  இயல்பானது

  வட கிழக்கு பருவமழை காலங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வங்கக்கடலில் உருவாகுவது வழக்கம். அவை அப்படியே மையம் கொண்டிருக்கும். அவற்றின் இயல்பே இரவில் மழை பொழிவை தருவதுதான். இது இயல்பான நிகழ்வு என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. எவ்வளவு அதிகம் தாழ்வு மண்டலங்கள் உருவாகுகிறதோ அவ்வளவு அதிக மழை பெய்யும்.

  அங்கேயும் பெய்ய வேண்டும்

  அங்கேயும் பெய்ய வேண்டும்

  மேலும், இப்போதுள்ள மழை என்பது கடலோர மாவட்டங்களில் மட்டுமே பெய்கிறது. சென்னைக்கு 100 கி.மீ உள்ளேயுள்ள தமிழக பகுதிகளில் மழையில்லை. வாலாஜா கூட காய்ந்து கிடக்கிறது. ஈரோடு, சேலம் மாவட்டங்களில் மழை இல்லை. எனவே இந்த மழை உள் மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும் என்பதே எனது ஆசை. இவ்வாறு ரமணன் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Why rain lashes at the night times in Chennai, here is the answer which is given by Ramanan.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற