• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஊதா கலரு சட்டை!… விஜயகாந்த் போட்ட பின்னணி தெரியுமா?

By Mayura Akilan
|

சென்னை: திருமண நாளில் குடும்பத்துடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்கும் விஜயகாந்த், இன்று தனது 25வது திருமண நாளினை சென்னையில் தன் குடும்பம், தன்னுடைய மச்சினர் குடும்பம் சகிதமாக குதூகலமாக கொண்டாடினார்.

அரசியல்தலைவர்கள் அணியும் ஆடைகளின் நிறங்களுக்கு கூட தனி கதை சொல்வார்கள். அப்படித்தான் குருபார்வைக்காக கருப்பு துண்டை உதறிவிட்டு மஞ்சள் துண்டு அணிந்தார் திமுக தலைவர் கருணாநிதி.

அதேபோல இன்றைய தினம் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன்களும் அணிந்திருந்த நீல கலர் உடை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

கரு நீலக்கலர் சனி பகவானுக்கு உகந்த வண்ணமாகும். இது கோபத்தை கட்டுப்படுத்தும் வண்ணமும் கூட. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கன்னி ராசி, சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்.

இவர் ஜென்ம சனியில் தமிழ்நாட்டின் எதிர்கட்சித்தலைவராக அமர்ந்தாராம். கூட்டாளி கிரகம் சனி என்பதால் நெருப்பின் மீது அமர்ந்திருப்பது போலத்தான் இருப்பார் என்கிறது இவரது ஜாதகம்.

ஆரோக்கியம் கெடுதல்

ஆரோக்கியம் கெடுதல்

சமீபத்தில் ஆரோக்கிய சீர்கேடு ஏற்பட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூர் வரை சென்றுவந்தார் விஜயகாந்த். எனவே சனி பகவானை கூல் செய்ய நீல கலர் ஆடை உடுத்த வேண்டும் என்பது ஆஸ்தான ஜோதிடர்களின் ஆலோசனையாம்.

ஊதா கலரு சட்டை

ஊதா கலரு சட்டை

இந்த சனிப்பெயர்ச்சி விஜயகாந்திற்கு நல்ல மாற்றத்தை தரக்காத்திருக்கிறதாம் எனவேதான் சனிபகவானை கவரும் வகையில் ஜோதிடர் ஆலோசனையின் பேரில் கருநீலக்கலர் ஆடை அணிய ஆர்வம் காட்டுக்கிறாராம்.

சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி

விஜயகாந்தின் ஜாதகத்தில் தற்சமயம் ஏழரை சனியில் புதன் திசை நடைபெறுகிறது. கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற சனிபெயர்ச்சி நன்மைகளையே செய்யும் என்கின்றனர் ஜோதிடர்கள். இழந்த செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். புதிய தெம்பும் உற்சாகமும் பிறக்குமாம்.

சட்டமன்ற தேர்தலில்

சட்டமன்ற தேர்தலில்

2016 சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் குருவும், சனியும் வலுவாக உள்ளதால் கூட்டணி கிரகங்கள் சாதகமாக உள்ளதால் இவருடைய கட்சிக்கு பெரிய அளவில் நன்மைகள் ஏற்படும். தமிழகத்தில் தன் கட்சியை நிலை நிறுத்திக் கொள்ள வழிவகை செய்யும். வரும் ஆண்டுகளில் இவருக்கு சனிப் பெயர்ச்சி நன்மைகளை அள்ளித்தர காத்திருக்கிறது என்கின்றனர் ஜோதிடர்கள்.

கேள்வி கேட்ட விஜயகாந்த்

கேள்வி கேட்ட விஜயகாந்த்

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் கருணாநிதி அணியும் மஞ்சள் துண்டு பற்றி கேள்வி கேட்டு அதற்கு விளக்கமும் கொடுத்தார் விஜயகாந்த். இப்போது தான் அணியும் ஊதா கலரு சட்டைக்கு விளக்கம் கொடுப்பாரா?

எது எப்படியோ? ஊதா கலரு சட்டை விஜயகாந்துக்கு எத்தகைய நன்மைகளை தரக்காத்திருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Back ground story of DMDK leader Vijayakanth wearing in Blue colour shirt. The ruling planet of Saturday is Saturn. People also get hospitalized or jailed due to Saturn. Wearing clothes of black and navy blue color will help in avoiding all the malefic effects of Saturn.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more