For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்.கே.நகரில் விஷால் வேட்புமனுவுக்கு ‘ஆப்பு’ வைத்ததற்கு காரணமே இதுதானாம்!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யபட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.கே.நகரில் விஷால் வேட்புமனுவுக்கு ‘ஆப்பு’ வைத்ததற்கு காரணமே இதுதானாம்!- வீடியோ

    சென்னை: ஆர்.கே.நகரில் விஷால் வேட்புமனுவை நிரகாரிக்க செய்ததற்கு பரபரப்பான பின்னணி காரணம் தெரியவந்துள்ளது.

    விஷாலைப் பொறுத்தவரையில் தமிழ் நடிகராக இருந்தாலும், அவரை தெலுங்கு மொழி பேசுவோர் தங்களது மண்ணின் நடிகராகவே பார்க்கிறார்கள்.

    ஆந்திராவில் மார்க்கெட்

    ஆந்திராவில் மார்க்கெட்

    அவருக்கான மார்க்கெட் தமிழகத்தில் இல்லை, ஆந்திராவில் இருக்கிறது என்றே கூறப்படுகிறது. ஆந்திராவிலும் கூட விஷாலை தமிழ் நடிகராகப் பார்க்காமல், தங்களது பிரதிநிதியாகவே பார்க்கிறார்கள்.

    மதுசூதனனுக்கு பலம்

    மதுசூதனனுக்கு பலம்

    வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமான அளவு ஆதி ஆந்திரா சமூகத்தினர் வாக்காளர்களாக இருக்கின்றனர். இவர்கள் காலம் காலமாக அதிமுகவின் பிரதான வாக்கு வங்கிகளில் முக்கியமானதாக இருந்து வருகிறார்கள். அதிமுக வேட்பாளராக நிற்கும் மதுசூதனனுக்கும் தாய்மொழி தெலுங்குதான்.

    டென்ஷனான அதிமுக

    டென்ஷனான அதிமுக

    குறிப்பாக 1991-ம் ஆண்டுக்குப் பின்னர் அதிமுகவின் பிரதான வாக்கு வங்கியாகவே ஆதி ஆந்திரா சமூகத்தினர் இருந்து வருகின்றனர். இந்த வாக்குகளை குறி வைத்துத்தான் விஷால் களம் இறங்கியிருக்கிறார். இதுதான் அதிமுக தரப்பை டென்ஷனாக்கியுள்ளது.

    உற்சாகத்தில் அதிமுக டீம்

    உற்சாகத்தில் அதிமுக டீம்

    இதனால்தான் விஷாலின் வேட்புமனுவின் பலவீனங்களை வைத்து அவரை தேர்தல் களத்தை விட்டே தூக்கியடித்திருக்கிறார்கள் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இப்போது அதிமுக முகாம் படு உற்சாகத்தில் இருக்கிறது.

    English summary
    Here is the reasons of Vishal's nomination papers was rejected in the RK Nagar By Poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X