திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன்.. அழகிரி பரபரப்பு பேட்டி!
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பேன் என்று மு.க அழகிரி பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பேன் என்று மு.க அழகிரி பேட்டியளித்துள்ளார்.
திருவாரூர் தேர்தலில் நேரடியாக களமிறங்க அழகிரி முடிவெடுத்து இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே பேசி வருகிறார்கள். இந்த நிலையில் மதுரையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இதற்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

திருவாரூர் தேர்தல்
அழகிரி மதுரையில் அளித்த பேட்டியில், திருவாரூரில் போட்டியிடுவது குறித்து யோசிக்கலாம். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதுகுறித்து முடிவெடுப்பேன். திருவாரூர் மக்களிடம் பேசி வருகிறேன். திருவாரூர் தேர்தல் அறிவிக்கப்படும் போது என் முடிவை அறிவிப்பேன்.

ஆதரவு அளிப்பார்கள்
திருவாரூரில் போட்டியிட்டால் அனைத்துக் கட்சி தலைவர்களும் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். நான் போட்டியிட்டால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள். எனக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கிறது.

பாஜக இயக்குகிறது
பாஜக என்னை இயக்கவில்லை. அப்படி வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. எனக்கும் பாஜக தலைவர்களுக்கும் எந்த உறவும் இல்லை. நான் திமுகவில் எந்த குழப்பமும் ஏற்படுத்த விரும்பவில்லை.

தனிக்கட்சி எண்ணம்
தலைவர் கருணாநிதியின் வழியை பின்பற்றி நடக்கிறேன். எப்போதும் பின்பற்றுவேன். திமுகதான் என் கட்சி. தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. தேர்தலில் நின்றால் கூட தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் கிடையாது என்றுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications