சொத்தில் என் பங்கு போனாலும் சகோதரிகளின் பங்கை சட்டப்படி மீட்பேன்: கார்த்திக்
சென்னை: சொத்தில் என் பங்கு கிடைக்காவிட்டாலும் என் சகோதரிகளின் பங்கை சட்டப்படி மீட்டுக் கொடுப்பேன் என்று நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்திக் தனது அண்ணன் கணேசன் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது தந்தை முத்துராமன் வாங்கிய சொத்துக்களில் தனக்கும், தனது 2 சகோதரிகளுக்கும் கிடைக்க வேண்டிய பங்கை தனது அண்ணன் கணேசன் அபகரித்துக் கொண்டதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கார்த்திக் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் அண்ணன் கணேசன் என் அம்மாவை ஏமாற்றியுள்ளார். அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. இந்நிலையில் அண்ணன் ஆங்கிலத்தில் எழுதிய பத்திரங்களில் அம்மாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். சொத்துப் பத்திரத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாமலேயே என் அம்மா கையெழுத்து போட்டுள்ளார்.
என் அண்ணன் செய்த காரியத்தால் எனக்கும், எனது 2 சகோதரிகளுக்கும் கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்காமல் போயுள்ளது. என் சகோதரிகளின் உரிமை மீட்கப்பட வேண்டும். சொத்தில் என் பங்கு கிடைக்காவிட்டாலும் என் சகோதரிகளுக்கு சேர வேண்டிய பங்கை சட்டப்படி மீட்டு அவர்களிடம் அளிப்பேன் என்றார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications