For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமல் அரசியல்.... தனிக் கட்சியா... வேறு கட்சியா.. அல்லது ட்விட்டரில் மட்டுமா?

By Shankar
Google Oneindia Tamil News

கமல் ஹாஸன் வெளிப்படையாக அரசியல் பேசிவிட்டார். 'அரசியல் எனக்குத் தெரியாது, வேண்டாம்' என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது நான் வயதுக்கு வராத அரசியல்வாதி என தனக்குத் தானே அங்கீகாரம் கொடுத்துக் கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசை, அமைச்சர்களை, தன்னை விமர்சிக்கும் அரசியல்வாதிகளை நேரடியாகவே தாக்கியுள்ள கமல் ஹாஸன் அடுத்து என்ன செய்யப் போகிறார்?

Will Kamal start new party?

நேரடியாகக் கட்சி ஆரம்பிப்பாரா? அது எந்த அளவுக்கு சாத்தியம்?

நிச்சயம் கமல் ஹாஸன் நேரடியாக அரசியல் கட்சி தொடங்கமாட்டார். கட்சி தொடங்க, தொண்டர்களை பராமரிக்க, தேர்தலைச் சந்திக்க ஆகும் செலவுகள் பற்றி அவருக்கும் தெரியும். போத்தீஸ், பிக்பாஸ், கபடி என விளம்பரத் தூதராக மாறி சம்பாதித்துக் கொண்டிருக்கும் கமல், நிச்சயம் கைக்காசை இறக்கமாட்டார். கமல் ஹாஸனை நம்பி அத்தனை பெரிய தொகையை இறக்க எந்த பெரிய முதலாளி முன்வருவார் என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. அதனால் தனிக் கட்சி என்பது சந்தேகம்தான்.

வேறு கட்சி?

கமலுக்கு இப்போது திமுக மட்டுமே ஆதரவுக் குரல் கொடுத்துள்ளது. அதுவும் அதிமுக அமைச்சர்கள் கடுமையாக எதிர்க்கிறார்களே என்பதற்காக கொடுக்கப்பட்ட குரல். திருமாவளவன், திருநாவுக்கரசர் ஆகியோர் நடுநிலைமை வகிக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாரும் மறந்தும் கூட அரசியலுக்கு வாங்க என்று கமல் ஹாஸனை அழைக்கவில்லை. வருவதும் வராததும் அவர் உரிமை என்கிறார்கள்.

மத்திய ஆளும் கட்சியும், மாநிலத்தை ஆளும் கட்சியும் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இதுதான் இப்போதைய அரசியல் களம். ஆக இன்னும் கொஞ்ச நாளைக்கு கமலின் அரசியல் ட்விட்டரில் மட்டும்தான் இருக்கும் என்று தெரிகிறது.

English summary
Will Kamal Hassan start a new party or join in another party? Here is an analysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X