For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடப்பாடியாருக்கு எம்எல்ஏ நடராஜ் திடீர் எதிர்ப்பு.. மக்கள் கோரிக்கைக்கு செவி சாய்ப்பா?

மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் சசிகலா தரப்பின் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் சசிகலா தரப்பின் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்கள் சசிகலா தரப்பை ஆதரிக்க எதிர்ப்பு தெரிவித்தற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சசிகலா தரப்பு தலைமையிலான எடப்பாடி பழனிச்சாமியின் அரசு நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.

will not support for Edappadi palanisamy in the assembly : MLA Nataraj

இதனிடையே நாளை எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான நடராஜ் தெரிவித்துள்ளார். அண்மையில் இவரது அலுவலத்துக்கு முன்பு திரண்ட மக்கள் ஓபிஎஸ் அணிக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் எம்எல்ஏ நடராஜின் இந்த அறிவிப்பு மக்களின் விருப்பத்துக்கிணங்க எடுக்கப்பட்ட முடிவா அல்லது சசிகலா தரப்பை மிரட்டிப் பார்க்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

English summary
Mylapore MLA Nataraj says that he will not support for Edappadi palanisamy in the assembly. Initially people were protesting front of his office in Mylapore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X