மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும்- இந்திய தேசிய லீக்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் இன்று நடைபெறும் இளம் தாமரை மாநாட்டுக்கு வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று இந்திய தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் தடா அப்துல் ரஹீம் கூறுகையில்,‘‘2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது நடந்த படுகொலைக்கு நரேந்திர மோடி தான் காரணம். ஆனால் இந்த சம்பவம் நாய்க்குட்டி காரில் அடிபட்டு இறப்பது போன்றது என அதற்கு ஒப்பிட்டு அப்போது நரேந்திர மோடி பேசினார்.
எனவே அவரது வருகைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். திருச்சி வரும் நரேந்திர மோடிக்கு கறுப்பு கொடி காட்டுவோம். இதில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொள்கின்றன''என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications