தமிழ்நாடு சட்டசபையில் மற்றொரு அதிரடி? ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானம் நிறைவேற்றமா?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பல்வேறு மாநிலங்கள் வரவேற்று வருகின்றன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் கடுமையாக கண்டனங்களுக்கு உள்ளான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானம், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டார். இந்த மசோதாக்களுக்கு தாம் ஒப்புதல் தராததால் அவை செத்துப் போய்விட்டன என கிண்டலடித்தார்.

ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, ஆளுநர் ரவின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் பெஞ்ச், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இந்த வழக்கில் வழங்கியது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஆளுநர்கள் அரசியல்வாதிகளாக செயல்படக் கூடாது; மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும்; மாநில சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்தாக வேண்டும் என கறாராக உத்தரவிட்டது. மேலும் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது ஆகியவை அரசியல் சாசனத்துக்கு எதிரானது; சட்டவிரோதமானது எனவும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
அத்துடன், ஆளுநர் ரவியால் கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுக்கும் தமது சிறப்பு அதிகாரம் மூலம் உச்சநீதிமன்றமே ஒப்புதலும் தந்தது. இதனையடுத்து இந்த 10 மசோதாக்களும் ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக கருதி தமிழ்நாடு அரசின் அரசாணையில் வெளியிடப்பட்டும் விட்டது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானம் ஒன்றை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி கூறுகையில்,ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; தமிழ்நாடு ஆளுநர் குறித்து உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் அவர் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பது அரசமைப்புச் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் அவமதிப்பது மட்டுமல்ல, ஜனநாயகத்துக்குப் பேராபத்தாகும். எனவே, ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதனால் தமிழ்நாடு சட்டசபையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications