For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வர்தா புயல்.... ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள், சின்டெக்ஸ் வாட்டர் டேங்குகள் பறக்கின்றன

வர்தா புயலால் பலமாக காற்று வீசுவதால் ஆஸ்பெஸ்டார் கூரைகள், வாட்டர் டேங்குகள் பறப்பதாக தகவல்கள் வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயல் சென்னையை நெருங்கி விட்ட நிலையில் வட சென்னையின் பல பகுதிகளில் பேய்க்காற்று வீசுகிறது. பல இடங்களில் கூரைகள், ஆஸ்பெஸ்டார் ஷீட்டுகள், வாட்டர் டேங்குகள் தூக்கி வீசி எறியப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னையின் வட பகுதியில்தான் கரையைக் கடக்கிறது வர்தா புயல். இதனால் அப்பகுதியில் மிக மிக பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது. மக்கள் வெளியில் தலை காட்ட முடியவில்லை.

Winds make mess in all over Chennai

வீடுகளை மூடிக் கொண்டு மக்கள் உள்ளேயே இருக்கின்றனர். ஜன்னலைக் கூட திறக்க முடியவில்லை. அந்த அளவுக்கு பேய்க் காற்று வீசுகிறது பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. தொலைத் தொடர்பு கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் விழுந்துள்ளன.

திருவொற்றியூரில் பல இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள், கூரைகள், தட்டிகள் உள்ளிட்டவை பறந்து விட்டன. பல இடங்களில் வீட்டுக்கு மேல் வைக்கும் சின்டெக்ஸ் வாட்டர் டேங்குகளும் கூட காற்றின் ஆவேசம் தாங்க முடியாமல் தூக்கி வீிசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

புயல் கரையைக் கடக்கும்போது மேலும் வேகமாக காற்று வீசும் என்பதால் மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.

English summary
Strong winds due to the cyclone Vardah, is making big mess in and around all over Chennai since the morning as the cyclone is nearing the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X