"செல்பி எடுக்க தெரியாது.. சொல்லி கொடுங்க சார்!" செல்பி எடுக்க சொல்லி தந்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தியாகராய நகரில் ஸ்கைவாக் எனப்படும் ஆகாய நடைபாதையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது ரங்கநாதன் தெருவில் திரண்டிருந்த மக்களுடன் கை குலுக்கி, செல்பி எடுத்துக் கொண்ட போது சுவாரசிய நிகழ்வு ஒன்று நடந்தது.
எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் நகரம் தான் நமது சென்னை.. ஏற்கனவே பல்வேறு துறைகளில் சென்னை டாப் நகரமாக இருந்தாலும் கூட மேலும் பல துறைகளில் வேகமாக வளர்ந்தே வருகிறது.
மக்கள்தொகை, ஜனநெருக்கடி காரணமாகச் சென்னை நகரில் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தியாகராய நகரில் இப்போது மிகப் பெரிய ஸ்கைவாக் எனப்படும் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

தியாகராய நகர்: சென்னையில் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் ஒன்றாக தியாகராய நகர் எப்போதும் இருக்கும். அங்கே தியாகராய நகரில் பேருந்து நிலையத்திற்கும் அருகே உள்ள மாம்பலம் மின்சார ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே சில நூறு மீட்டர் தூரம் இருக்கும். ரயில்வே நிலையத்தில் இருந்து பஸ் ஸ்டான்ட் வரும் மக்களால் அங்கே சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கிடையே அதைத் தீர்க்கும் வகையில், தி நகர் பஸ் ஸ்டாண்டு முதல் மாம்பலம் ஸ்டேஷன் வரை ஸ்கைவாக் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீண்ட தாமதத்திற்குப் பிறகு இந்த திட்டம் இப்போது தான் நிறைவடைந்துள்ளது. இந்த ஸ்கைவாக்கை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 28.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்கைவாக், தி.நகர் பஸ் ஸ்டாண்டு, ரங்கநாதன் தெரு, மார்க்கெட் சாலை, மாம்பலம் ஸ்டேஷன் ஆகியவற்றை இணைக்கிறது.

ஸ்கைவாக்: 570 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கிறது. மக்களின் வசதிக்காக இதில் தி.நகர் பேருந்து முனையத்தில் ஒரு எஸ்கலேட்டர், உஸ்மான் சாலை மற்றும் மாம்பலம் ஸ்டேஷனில் இரண்டு லிஃப்ட்களும் இருக்கிறது. மேலும், ஆகாய நடைபாதையில் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் அழகிய ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
இந்த ஸ்கைவாக் இப்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், இதன் பிறகு அங்கே ஓரளவுக்கு டிராபிக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கைவாக்கை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். அந்த ஆகாய நடைமேம்பாலம் முழுவதும் நடந்து சென்றார். அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், ஸ்கைவாக்கில் இருந்து இறங்கி ரங்கநாதன் தெருவில் சென்றார்.
சுவாரசிய சம்பவம்: அங்கே திரளான மக்கள் திரண்டிருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் சென்று கைகுலுக்கி, செல்பி எடுத்துக் கொண்டார். மேலும், அங்கிருந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் முதல்வர் பெற்றுக் கொண்டார். அப்போது தான் அங்கே ஒரு சுவாரசிய சம்பவம் நடந்தது.

ரங்கநாதன் தெருவில் நடந்து கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்த மக்களுடன் கைகுலுக்கி, செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் முதல்வருடன் செல்பி எடுக்க வேண்டும் எனக் கேட்டார். முதல்வர் ஸ்டாலின் அருகே வந்ததும், அவர் மொபைலை எடுத்து ஏதோ தேடிக் கொண்டிருந்தார்.
அப்போது முதல்வர், செல்பி எடுக்கத் தெரியுமா எனக் கேட்க.. அந்த பெண், "எடுக்கத் தெரியாது" என்று கூறினார். "பிறகு எப்படி எடுப்பீர்கள்" என முதல்வர் கேட்க.. "நீங்க எடுக்கச் சொல்லிக் கொடுங்க" என்று அந்த பெண் சொல்ல அங்குச் சிரிப்பலை ஏற்பட்டது. அந்த பெண் கூறியதைக் கேட்டு முதல்வர், அமைச்சர்கள் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications