காஸ்ட்லி தீபாவளி டிரஸ் எடுத்துக் கொடுக்காத புருஷன்..உயிரை விட்ட மனைவி - திருப்பூரில் ஒரு சோகம்!
திருப்பூர்: திருப்பூரில் தீபாவளிக்கு புதுத்துணிகள் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்துள்ள அருள்புரம் ஊராட்சி உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை.
தனியார் பனியன் நிறுவன தொழிலாளியான இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், அனிதா என்ற மகளும் உள்ளனர்.
அதிக விலைக்கு துணி:
தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் சென்றனர். அதிகமான விலையில் துணி எடுக்க வேண்டாம் என்று செல்லத்துரை கூறியுள்ளார்.
சமாதானமான தம்பதிகள்:
எடுப்பதில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகக் தெரிகிறது. பின்னர், சிறிது நேரத்தில் சமாதானமடைந்த கனவன், மனைவி இருவரும் மகளுடன் கடைக்குச் சென்று துணி எடுத்துக்கொண்டு மாலை 4 மணி அளவில் வீடு திரும்பினர்.
தூக்கில் தொங்கிய சகுந்தலா:
வீட்டுக்கு வந்த மூன்று பேரும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர். இரவு 7 மணி அளவில் செல்லத்துரை கண்விழித்து பார்த்த போது அருகில் படுத்திருந்த மனைவியை காணவில்லை. பதற்றமடைந்த செல்லத்துரை வீட்டில் உள்ள அறைக்குச் சென்று பார்த்த போது சகுந்தலா தூக்கில் தொங்கினார்.
போலீசில் புகார்:
இது குறித்து செல்லத்துரை பல்லடம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீஸார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது பற்றி விசாரணை நடக்கிறது.
துணிகளுக்காக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications