• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளிக்கிழமை விடிகாலை.. கோலம் வந்த போட வந்த சித்ரா.. பதற வைத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!

|

மயிலாடுதுறை: வெள்ளிக்கிழமை விடிகாலை, கோலம் வந்த போட வந்த சித்ராவை கொன்றே போட்டுவிட்டார் ரியாஸ்.. இவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாக இருந்தவர்.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஓதவந்தான்குடி பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது... இந்த பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்த ஜோதி.. இவரது மனைவி சித்ரா.

கடந்த வெள்ளிக்கிழமை விடிகாலை நேரத்தில் வீட்டு வாசலில் சித்ரா கோலம் போட்டுக்கொண்டிருந்தார். குனிந்து கோலம் போட்டுக்கொண்டிருந்த சித்ராவின் தலையில் யாரோ பலமாக அடித்ததுபோல இருந்தது.. வலி தாங்க முடியாமல் அங்கேயே அலறிவிழுந்து உயிரிழந்தார் சித்ரா.

கிரேட் எஸ்கேப்.. 2 வயது குழந்தை மீது ஏறிய ரயில்.. ஒரு சின்ன காயம் கூட இன்றி உயிர் தப்பிய அதிசயம்

சித்ரா

சித்ரா

விடிகாலை நேரம் என்பதால், வீட்டில் இருந்தோர் நன்றாக தூங்கி கொண்டிருந்திருக்கிறார்கள்.. இவர் சத்தம் போட்டது யாருக்கும் கேட்கவும் இல்லை.. பிறகு வீட்டு பக்கத்தில் வசிக்கும் ஒரு பெண் தற்செயலாக பார்த்தபோதுதான் சித்ரா ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை கண்டு சத்தம்போட்டார்.

கொலை

கொலை

இதுகுறித்து போலீசுக்கும் தகவல் பறந்தது.. விரைந்து வந்த அவர்கள் அந்த தெருவில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தனர்.. அப்போதுதான், சித்ரா கோலம்போடும்போது இரும்பு குழாயுடன் அங்கே மறைந்திருந்து, கொலை செய்துள்ளார் என்று தெரியவந்தது. இதையடுத்து விசாரணை துரிதமாக ஆரம்பமானது.

செல்போன்

செல்போன்

கொலையாளி யார்? எதற்காக சித்ராவை காத்திருந்து கொல்ல வேண்டும்? என்ற கோணத்தில விசாரிக்கப்பட்டது.. சித்ராவின் செல்போன் ஆராயப்பட்டது.. அப்போதுதான் பிருந்தா என்ற பெண் மீது சந்தேகம் திரும்பியது. இவர் சித்ராவின் வீட்டில் குடியிருப்பவர்.

குழந்தை

குழந்தை

பிருந்தா கல்யாணம் ஆனவர்.. அவரது கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறாராம்.,., 3 வயசில் ஒரு குழந்தையும் உள்ளது.. பிருந்தாவின் தந்தையை தொழில் நிமித்தமாக ரியாஸ் என்பவர் அடிக்கடி தேடி வீட்டுக்கு வந்துள்ளார்.. அப்போது இருவருக்கும் லவ் வந்திருக்கிறது.. தினமும் செல்போனில் மணிக்கணக்கில் 2 பேரும் பேசி வந்துள்ளனர்.

காதலர்கள்

காதலர்கள்

ரியாஸ் நாகை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாக பொறுப்பு வந்தவராம்.. அப்போதே கம்ப்யூட்டர் கிளாசுக்கு பிருந்தா சென்றபோது, அங்கேயே இருவரும் காதலித்துள்ளனர்.. அதாவது இவர்கள் முன்னாள் காதலர்கள்.. நெருங்கியும் பழகி வந்துள்ளனர்.. இந்த சமயத்தில்தான் பிருந்தாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் கல்யாணம் ஆகி உள்ளது.. ஆனால், திருமணத்துக்கு பிறகும் அவரை மறக்க முடியாமல், ரியாஸ் பிருந்தாவுடன் எதைஎதையோ சாக்கு வைத்து காதலியுடன் பழகி வந்துள்ளார்.

வார்னிங்

வார்னிங்

இறந்துபோன சித்ரா வீட்டில்தான் பிருந்தா குடியிருந்திருக்கிறார்.. வீட்டில் யாருமில்லாத நேரத்தில், அடிக்கடி ரியாஸ் பிருந்தா, வீட்டுக்கு வந்து போயுள்ளார்.. இதை சித்ரா பார்த்துவிட்டு, கண்டித்துள்ளார்.. 2 பேரையும் தனித்தனியாக கூப்பிட்டு வார்ன் செய்திருக்கிறார்.. ஒருமுறை தன் வீட்டிற்குள் வரவே கூடாது என்று சித்ரா கண்டிப்புடன் சொல்லி உள்ளார்.. இதுதான் ரியாசுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணிவிட்டது.

பிளான்

பிளான்

அதனாலேயே அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.. தினமும் விடிகாலையில் சித்ரா கோலம் போடுவது வழக்கமாம்.. இதை தெரிந்து வைத்து கொண்டுதான் அங்கு வந்திருக்கிறார்.. இதற்கான ஸ்கெட்ச் போட்டு தந்ததே பிருந்தா தான்.... ஏற்கனவே சித்ராவை கொலை செய்ய 2 முறை பிளான் செய்தும், அது முடியவில்லை.. அதனால், ஆள் நடமாட்டம் இல்லாத விடிகாலை நேரத்தை 2 பேரும் தேர்வு செய்துள்ளனர்.

கைது

கைது

அதன்படியே வெள்ளிக்கிழமை கோலம் போட்டு கொண்டிருந்த போது, விடிகாலை நேரம் இருட்டாகவே இருந்திருக்கிறது.. யாரும் அந்த பகுதியில் இல்லை.. அப்போதுதான் இரும்பு குழாயால் பயங்கரமாக தாக்கி கொன்றுள்ளார் ரியாஸ். இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Woman murdered by Vijay Fan club executive near mayiladurai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X