தேசிய கீதம் பாடும் போது தீ குளிக்க முயற்சித்த பெண்கள்... அதிர்ந்த முதல்வர் - வீடியோ
சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மேடை அருகே ஜனகனமன பாடிக்கொண்டிருக்கும் போதே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு 2 பெண்கள் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சிவகாசி: சிவகாசியில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் இருந்த விழா மேடை எதிரே மாமியார், மருமகள் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

முதல்வர் பேசி முடித்த உடன், தேசிய கீதம் ஒளிபரப்பானது. அப்போது பின் வரிசையில் இருந்து வந்த 2 பெண்கள், தங்களின் கைகளில் இருந்த கேனில் இருந்து மண்ணெண்ணெயை திடீரென ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதை கவனித்த போலீஸார் உட்பட பலர் அவர்களை காப்பாற்றினர். இதனால் விழா அரங்கமே பரபரப்பானது. முதல்வர் உட்பட அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தீக்குளித்தவர்கள் ராஜபாளையம் நரிமேடு இந்திரா காலனியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரின் தாயார் பார்வதி,52, மனைவி கனக லட்சுமி, 21 ஆவார்கள். முனீஸ்வரனை ஒரு வழக்கு தொடர்பாக ராஜபாளையம் போலீஸார் சில நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்ற நிலையில், அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிகிறது.
கணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ய திட்டமிடுகின்றனர். முதல்வர் பங்கேற்கும் விழாவில் தீக்குளித்தால்தான் எனது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனக் கருதி வந்தேன் என பார்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications