கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள் கூட்டம்! - வீடியோ
புதுக்கோட்டை கொத்தமங்கலம் டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை விடுத்த வந்த நிலையில், அதிகாரிகள் கடையை அகற்றாத காரணத்தால் பெண்கள் ஒன்று கூடி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் பெண்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். அதுமட்டுமில்லாமல் அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர்.
உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதையடுத்து ஒரே இரவில் 3321 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடியது. அவ்வாறு மூடிய கடைகளை டாஸ்மாக் அதிகாரிகள் ஊருக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்ப்பு தெரிவித்துவருகின்றனர். புதுக்கோட்டை கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அதிகாரிகள் அதைக் கண்டுகொள்வதாக இல்லை.
இதனால் கொதித்தெழுந்த கொத்தமங்கலம்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த காவல்துறை அதிகாரிகளையும் முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளை மக்கள் அடித்து நொறுக்கி வருவதால் 7 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அரசின் முதன்மை வருவாயாக டாஸ்மாக் நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications