சாம்பர்ல இனி சின்ன வெங்காயத்தை தேடாதீங்க... ஒரு கிலோ ரூ.200...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்ன வெங்காயம் உறித்தால்தான் கண்ணீர் வரும். இப்போது அதன் விலையை கேட்டாலே கண்ணீர் விடுகின்றனர் இல்லத்தரசிகள். காரணம் ஒரு கிலோ சில்லறை விலையில் 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, தேனி மாவட்டங்களில் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக வறட்சியால் சின்ன வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. மே மாதத்தில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விலை குறைவாக விற்பனையாகும் இடங்களில் இருந்து சென்னைக்கு வெங்காயத்தை வாங்கி வந்து உபயோகித்தனர்.

ஒரு கிலோ ரூ. 200க்கு விற்பனை

ஒரு கிலோ ரூ. 200க்கு விற்பனை

தமிழக சமையலில் சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றிர்க்கு தனி இடமுண்டு. சுவைக்காகவே அதிக அளவில் சின்ன வெங்காயத்தை கண்ணில் நீர் வர உறித்து சமையல் செய்வார்கள். இப்போது சில்லறை விலையில் சின்ன வெங்காயத்தின் விலை 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சின்ன வெங்காயம் வரத்து குறைவு

சின்ன வெங்காயம் வரத்து குறைவு

வெளி மாநில வெங்காயத்தை கொண்டு வந்து சில மாதங்களுக்கு முன்பு வெளி மார்க்கெட்டில் கிலோ விலை ரூ.150 வரை விற்பனை செய்தனர். திண்டுக்கல் காய்கறி சந்தைக்கு கடந்த 2 ஆண்டுகளாக, வறட்சியால் சின்ன வெங்காயம் வரத்து பாதியாக குறைந்தது. சில மாதங்களாக வரத்து மேலும் குறைந்து, ஆயிரம் மூட்டை வெங்காயம் மட்டுமே வந்தது. தற்பொழுது சில நாட்களாக சின்ன வெங்காயம் வரத்து 700 மூட்டைகளாக குறைந்தது.

நுகர்வோர் கலக்கம்

நுகர்வோர் கலக்கம்

இதனால் விலை படிப்படியாக உயர்ந்து, தற்போது மொத்த மார்க்கெட்டிலேயே ரூ.150 முதல் ரூ.160 வரை விற்கிறது. இதை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் போக்குவரத்து செலவு, லாபம் என கணக்கிட்டு கிலோ ரூ.180 வரை விற்கின்றனர். சின்ன வெங்காயத்தை வாங்கவே நுகர்வோர் தயக்கம் காட்டுகின்றனர்.

விலை அதிகரிப்பு ஏன்?

விலை அதிகரிப்பு ஏன்?

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ 150 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை கடைகளில் கால் கிலோ சின்ன வெங்காயம் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.

காரணம் உற்பத்தி குறைவுதான் என்றார்.

விவசாயிகள் சொல்வதென்ன?

விவசாயிகள் சொல்வதென்ன?

சின்ன வெங்காயம் உற்பத்தி குறைந்தது ஏன் என்று விவசாயிகள் சில காரணங்களை தெரிவிக்கின்றனர். குறைந்தபட்சம் கிலோ ரூ.130க்கு விதை வெங்காயம் வாங்கி நடவு செய்து உரமிட்டு தண்ணீர் பாய்ச்சி 3 மாதம் கழித்து அறுவடைக்கு வரும்போது, வெங்காய விலை அதிகமாக இருக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை.

விலை குறைய வாய்ப்பே இல்லை

விலை குறைய வாய்ப்பே இல்லை

தெரிந்தே நஷ்டப்பட தயார் இல்லாததால் விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்று விற்பனையார்கள் கூறுகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் இதுபோன்ற விலை உயர்வை பார்த்ததில்லை. தை மாதம் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறி விற்பனையாளர்கள் வருகின்றனர்.

செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

இதனிடையே சென்னையில் ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ, சின்ன வெங்காயம் பண்ணை பசுமை கடையில் ரூ.140க்கு விற்கப்படுகிறது. தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு 18 லோடு சின்ன வெங்காயம் வரும். தற்போது 5 லோடு மட்டுமே வருகிறது. மழை அதிகமாக பெய்தால் சின்ன வெங்காயம் அழுகி விடும். இருந்தாலும் மற்ற மாநிலங்களில் இருந்து சின்ன வெங்காயம் ரயில் மூலம் வாங்கி தமிழகத்தில் விற்க முடியுமா என்று ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Small onion prices are leaving households in TamilNadu in tears. Small onion was being sold at Rs 200 a kg.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற