For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அம்மா"வுக்குக் கை கொடுப்பார்களா ஆர்.கே.நகர் பெண்கள்?

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். இவர்களின் வாக்குகள் தங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிமுகவினர் உள்ளனர்.

Women voters dominate R K Nagar by election

பல்வேறு செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக இந்த முறை இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து பெரிய அளவில் பண பலம் விளையாடவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் செலக்டிவாக கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டனர் அதிமுகவினர் என்றும் பேச்சு அடிபடுகிறது.

இடைத் தேர்தலைக் கண்டுள்ள ஆர்.கே.நகர் தொகுதி தொடர்பான சில முக்கியத் தகவல்கள்:

  • மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 543 பேர். இதில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 960 பேர் ஆண்கள். 1 லட்சத்து 21 ஆயிரத்து 508 பேர் பெண்கள். 75 பேர் திருநங்கைகள்.
  • முக்கியக் கட்சிகளான திமுக, பாமக, மதிமுக, தமாகா, பாஜக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக ஆகியவை போட்டியிடவில்லை.
  • மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 28 பேர் ஆகும்.
  • வேட்பாளர்கள் விவரம்: ஜெயலலிதா, சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்)., சுயேச்சைகள் - ஆர்.அபிரஹாம் ராஜ் மோகன், எம்.சுபாஷ் பாபு, டி.பால்ராஜ, யு.கே.மணிமாறன், ஜெ.மோகன்ராஜ், எம்.அகமது ஷாஜகான், ஜெ.அப்துல் ரஹீம், இ.ராமதாஸ், பி.குமாரசாமி, எம்.கோபி, வி.துரைவேல், யு.நாகூர் மீரான் பீர் முகமது, ஏ.நூர் முகமது, டாக்டர் கே.பத்மராஜன், பி.பிரகாஷ், பி.பொன்ராஜ், சி.மகாராஜன், பி.மாரிமுத்து, எம்.எல்.ரவி, கே.ஆர்.ராமசாமி (எ) டிராபிக் ராமசாமி, எம்.வசந்த குமார், ஏ.வெங்கடேஷ், இ.வேணுகோபால், ஆர்.ஜெயகுமார், ஜெ.ஜெயகுமார், பி.என்.ஸ்ரீராமச்சந்திரன்.
  • முதல்வர் ஜெயலலிதா இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஒரே ஒரு நாள் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் மொத்த அமைச்சர்களும் தொகுதியிலேயே குடியிருந்து தினசரி தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர்.
  • மொத்த வாக்குச் சாவடிகள் - 230. பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் 22 வாக்குச்சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ன.
  • தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தனது அறையில் இருந்தபடியே கண்காணிப்பார்.
  • 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
  • ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு கண்ட்ரோல் யூனிட் எந்திரமும் என மொத்தம் 230 வாக்குச்சாவடிகளுக்கு 460 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 230 கண்ட்ரோல் யூனிட்களும் பயன்படுத்தப்படுகிறது.
  • பதிவான வாக்குகளை எண்ணும் பணி 30ம் தேதி நடைபெறும்.
English summary
Women voters are more in R K Nagar by election which is having CM Jayalalitha in contest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X