#Exclusive பாஜகவின் தேர்தல் ‘தந்திரம்’.. மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது கேள்விக்குறி?
சென்னை: வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகளை பெறுவதற்கு பாஜக செய்யும் 'ட்ரிக்' தான் இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் விமர்சித்துள்ளார் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி.
வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (செப்டம்பர் 20) நிறைவேற்றப்பட்டது. மசோதாவை கொண்டு வர கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற பலமுறை முயன்றும், பெரும்பான்மை இல்லாத காரணத்தால் நிறைவேற்ற முடியவில்லை. இந்தச் சூழலில், லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது பாஜக. அதேசமயம், இது எங்களின் கனவு மசோதா, ஆனால், இதை அரசியல் ஆதாயம் தேட பாஜக அரசு கொண்டு வந்துள்ளது, ஓபிசி இட ஒதுக்கீடு முழுமையாக இல்லை என காங்கிரஸ் விமர்சனம் வைத்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம், நமது ஒன் இந்தியா தமிழுக்கு, 'மகளிர் இட ஒதுக்கீடு மசோதா' தொடர்பாக பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இனி அவரது பேட்டி வருமாறு:
ஸ்ரீநிதி பேட்டி: மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா பல ஆண்டுகளாக நாம் காத்திருந்த மசோதா தான். இது எங்களின் மசோதா. ஏற்கனவே பஞ்சாயத்து ராஜில் 50% இட ஒதுக்கீடு மகளிருக்கு வழங்கியது காங்கிரஸ். பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியின் கனவு. இன்று வேண்டுமானால், பாஜக, பெண்களின் முன்னேற்றத்திற்காக தாங்களே கொண்டு வருவது போல பேசலாம். ஆனால், இது ராஜீவ் காந்தியின் கனவு.
இத்தனை மேயர்கள், கவுன்சிலர்கள் உள்ளாட்சி மன்றங்களில் பதவி வகிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் காங்கிரஸ் அரசு தான். சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும், முடிவெடுக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக போராடினோம். பெண்களுக்கு வாக்குரிமையே அளிக்கப்படாமல் நசுக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து இன்று பெண்கள் பல இடங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட இடங்களில் அமர்ந்திருக்கிறார்கள்.
பெண்களின் ஓட்டுகளை பெற: இன்று வரை பெண்களின் பிரதிநிநித்துவம் என்பது லோக்சபாவிலும் சரி, மாநில சட்டமன்றங்களிலும் சரி குறைவாகவே உள்ளது. மாநில சட்டமன்றங்களில் வெறும் 10% மட்டுமே பெண்கள் உள்ளனர். லோக்சபாவில் 543 எம்.பிக்களில் 80 எம்.பிக்கள் மட்டுமே பெண்கள் உள்ளனர். இந்தச் சூழலில் இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் இன்னும் 100 எம்.பிக்கள் அதிகமாக வருவார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டு, திமுக, காங்கிரஸ் என எல்லா கட்சிகளும் வரவேற்கின்றன.
ஆனால், இந்த மசோதாவில் சில உட்கூறுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதைத்தான் இடைஞ்சலாகப் பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி மறுவரையறை செய்த பிறகுதான் இந்த மசோதா அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்சஸ் எப்போது எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது. அப்படி இருக்கும்போது பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த மசோதாவை அவசரமாக கொண்டு வந்ததாக பாஜக அரசு காட்டிக்கொள்கிறது.
பாஜகவின் ட்ரிக்: பிரதமர் மோடி டயலாக் எல்லாம் பயங்கரமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதனை நிறைவேற்றுவார்களா என்பது கேள்விக்குறிதான். பாஜக வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு ஏமாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளது. வேலைவாய்ப்பு தருவோம் என பொய் சொல்லி இளைஞர்களின் வாக்குகளை கவர்ந்தது போல, பெண்களின் வாக்குகளை கவர இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறார். பெண்கள் மத்தியில் பாஜக ஆட்சியின் பெயர் டேமேஜாக உள்ளது. சிலிண்டர் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பெண்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, பெண்களை குளிர்விக்க பாஜக இதனைச் செய்துள்ளது. இது இவர்களின் ஐடியாவும் இல்லை. காங்கிரஸின் முயற்சி, மற்ற கட்சிகளின் ஆதரவின்மை காரணமாக நிறைவேற்ற முடியவில்லை. இப்போது தங்கள் பெரும்பான்மை பலத்தை வைத்து நிறைவேற்றுகிறார்கள். இதை 9 ஆண்டுகளாக செய்யாமல் தேர்தலின் போது ஏன் செய்ய வேண்டும்? இப்போது இந்த மசோதா அமல்படுத்துவதில் உள்ள அம்சங்களைப் பார்க்கும்போது இது பெண்களின் வாக்குகளை பெறுவதற்கான பாஜகவின் 'ட்ரிக்' என்றே தோன்றுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications