வாவ்.. சென்னையில் தரையிறங்கிய உலகின் ராட்சச சரக்கு விமானம்.. சீனா அனுப்பிய பார்சல்!
உலகின் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான ஆண்டனோவ் ஏஎன்-124 (Antonov AN-124) சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.
Recommended Video

சென்னை: உலகின் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான ஆண்டனோவ் ஏஎன்-124 (Antonov AN-124) சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இந்த விமானம் இறங்கி உள்ளது. இந்த விமானம் இன்று மீண்டும் சீனாவிற்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
இது டேக் ஆப் செய்வதை பார்க்க பெரிய அளவில் மக்கள் கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமான அடிக்கடி சென்னை வரவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

என்ன விமானம்
ஆண்டனோவ் ஏஎன்-124 (Antonov AN-124) என்ற சரக்கு விமானம்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய சரக்கு விமானம் ஆகும். இந்த விமானத்தில் 150 டன் எடை வரை ஏற்ற முடியும். பார்க்கவே இந்த விமானம் வாயை பிளக்க வைக்கும் அளவிற்கு இருக்கும். இது ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட விமானம் ஆகும்.

எத்தனை கிலோ கொண்டு வந்தது
இந்த நிலையில் இந்த விமானம் நேற்று சென்னை வந்தது. இதில் 58 டன் லோட் ஏற்றி வரப்பட்டு இருக்கிறது. வேறு நாட்டில் இருந்து, இந்தியாவிற்கு விமானம் மூலம் இத்தனை டன் எடை வந்தது இதுவே முதல்முறையாகும். அதுவும் இந்த விமானம் சென்னைக்கு வந்துள்ளது. இது சென்னைக்கு வருவதும் இதுவே முதல் முறையாகும்.

சீனாவில் இருந்து
இந்த விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டாலும், சீனாவில் இருந்து லோட்களை கொண்டு வந்துள்ளது. சென்னைக்கு சீனாவில் இருந்து என்ன பொருட்கள் கொண்டு வரப்பட்டது என்று கூறப்படவில்லை. ஆனால், மிகவும் பெரிய பெரிய ராட்சச பார்சல்கள் சீனாவில் இருந்து தரையிறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வரும்
இந்த விமானம் இன்று மீண்டும் சீனாவிற்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விமான அடிக்கடி சென்னை வரவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் நிறைய அளவில் லோட்களை அனுப்ப வேண்டும் என்பதால் இந்த விமானம் அடிக்கடி சென்னை வர வாய்ப்புள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications