''அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடியார்''! ஓ.பன்னீர்செல்வத்தை கடுப்பாக்கிய சித்ரா எம்எல்ஏ!
சென்னை: ''அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடியாரை வணங்கி பேசுகிறேன்'' என சட்டசபையில் தனது விசுவாசத்தை காட்டியிருக்கிறார் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா.
என்னதான் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தற்போது பொறுப்பேற்றாலும் கூட அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை தான் அக்கட்சியினர் இன்னும் கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அவர் தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்பதையும் அந்தப் பதவிக்கு வேறு யாரும் எந்தக் காலத்திலும் போட்டியிட முடியாது என்பதை உணர்த்தும் வகையிலும் சித்ரா எம்.எல்.ஏ.வின் பேச்சு அமைந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியை நிரந்தர பொதுச்செயலாளர் என சித்ரா எம்.எல்.ஏ. பேசியதை கேட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண் மொழித் தேவன், ஒரு நொடி திகைத்துப் போய் திரும்பிபார்த்தார்.
இதனிடையே சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் அமர்ந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை கடுப்பேற்றும் வகையில் எடப்பாடி பழனிசாமியை அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா இருக்கும் வரை அவரை நிரந்தர பொதுச்செயலாளர் என்று அழைத்த பல நிர்வாகிகளும் அவர் மறைவுகு பிறகு கொஞ்சம் கூட தயங்காமல், தியாகத் தலைவி சின்னம்மா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என முழக்கங்கள் எழுப்பி சசிகலாவை வம்பில் மாட்டிவிட்டனர்.

இதனிடையே இப்போது எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றழைப்பதில் ஒரு லாஜிக் உண்டு. ஆனால் அவர் மட்டும் தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்றழைப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது என்பதை இதுவரை யாரும் விளக்கவில்லை.
இது எடப்பாடி பழனிசாமிக்கு தான் தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தும். விசுவாசத்தை காட்டுகிறேன் என்ற பெயரில் எதையாவது சொல்லி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வேலைகளை அவரது ஆதரவாளர்கள் ஆர்வக் கோளாறில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அரசியலை பொறுத்தவரை எந்தப் பதவியும், யாருக்கும் நிரந்தரம் கிடையாது என்பது மட்டும் எழுதப்படாத விதியாக இருந்து வருவது கவனிக்கத்தக்கது.
-
தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்..பொய்க்கால் குதிரை அரசு! விஜய்யை வெளுத்த எடப்பாடி பழனிசாமி -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி












Click it and Unblock the Notifications