குடிகார கணவனுடன் சண்டை.. பெற்ற பிள்ளைகளுக்கே விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயற்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பழனி: கணவன் திட்டியதால் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

பழனி பத்திரா தெரு பகுதியில் வசித்து வருபவர் சோனைமுத்துவின் மனைவி சித்ரா. இந்த தம்பதிக்கு தன்னாசி, முத்து என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சோனைமுத்து மது போதையில் அடிக்கடி மனைவி சித்ராவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்றும், வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த சோனைமுத்து மனைவி சித்ராவை தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிட்டதால் சித்ரா மனம் உடைந்துள்ளார்.

 Young lady poisoned her sons and attempted for suicide over drunken husband's torture

இதனால் வாழ்க்கையை வெறுத்த சித்ரா, உணவில் விஷம் கலந்து அதனை தனது இரண்டு மகன்களுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் தானும் அந்த விஷம் கலந்த உணவை அருந்தியுள்ளார். இதனால் மூவரும் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளனர்.

இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சித்ரா மற்றும் அவரது இரண்டு மகன்களை மீட்டு உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மூவரும் உயிர் பிழைத்தனர். பழனியில் பெற்ற தாயே குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fight over drunken husband youn girl from Palani poisoned her sons and she also attempted for suicide, fortunately escaped
Please Wait while comments are loading...