நாகை அருகே மைனர் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த இளைஞர் கைது
நாகப்பட்டினம் அருகே மைனர் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இரண்டாவதாக மைனர் பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைஞாயிறு சந்தை வெளி தெருவைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொடியாளத்தூரில் தனது உறவினர் வீட்டில் தங்கி நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த அருள்(எ)அருள்ராஜ் என்பவர் கவிதாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இரு குழந்தைகள் உள்ளனர். இதை மறைத்து அவர் கவிதாவை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கவிதாவும், அருளும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு திருப்பூர் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
திடீரென கவிதாவை காணாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அருள் உடன் சென்ற விபரம் தெரிந்து கவிதா வீட்டார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் இருவரையும் தேடி வந்தனர்.
அவர்கள் திருப்பூரில் இருப்பதை அறிந்து அங்கு விரைந்து சென்று இருவரையும் பிடித்தனர். திருப்பூரில் இருந்த இருவரையும் அழைத்து வந்து அருள்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். கவிதாவை மருத்துவ பசோதனைக்கு பிறகு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications