பழனிமலை ராஜகோபுரத்தில் வாலிபர் தற்கொலை: மூடப்பட்ட சன்னதி
பழனி: தை பூசத்திற்கு தயாராகி வரும் பழனிமலை முருகன் ஆலயத்தின் ராஜகோபுரத்தில் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முருகன் சன்னதி மூடப்பட்டு தரிசனம் நிறுத்தப்பட்டது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனியில் உள்ள முருகன் கோயில். செவ்வாய் தலமாகவும் போற்றப்படும் பெருமைக்குரியது. இன்னும் சில வாரங்களில் பழனி மலையில் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பழனி மலையில் ராஜகோபுரம் அருகே தங்ககோபுரம் உள்ளது. போலீஸ் பாதுகாப்பையும் மீறி 35 வயதுக்குட்பட்ட இளைஞர் ஒருவர் ராஜகோபுரத்தில் தூக்கில்தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இளைஞர் தற்கொலையால் முருகன் சன்னிதானம் மூடப்பட்டு தரிசனம் நிறுத்தப்பட்டது.
தைபூச திருவிழா நடைபெற உள்ள நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் கவனக் குறைவினால்தான் பக்தர் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications