படிச்சு பெரிய ஆளா வருவேன்! அப்பவும் நீங்க முதல்வரா இருக்கனும்! மீண்டும் கடிதம் அனுப்பிய மாணவி ஆராதனா

Subscribe to Oneindia Tamil

தென்காசி : தென்காசி அருகே பள்ளி கட்டிடத்தின் நிலைமையை சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய மாணவியின் பெயரைக் கூறியதோடு, நிகழ்ச்சி மேடையிலேயே பள்ளி கட்டிடம் கட்டித் தர முதல்வர் நிதி ஒதுக்கிய நிலையில் அம்மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, நேரில் சந்திக்க வேண்டுமென தனது ஆவலையும் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி பகுதி அருகே வினைதீர்த்தநாடார்பட்டி இன்று கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் கட்டிடங்கள் போதுமானதாக இல்லை எனவும் விளையாட்டுத் திடல் இல்லாததால் மாணவ மாணவிகள் தொடர்ந்து பல நாட்களாக அவதி அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை எடுத்து அந்தப் பள்ளியில் படிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆராதனா என்ற மாணவி இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றினை கடந்த மாதம் 28ஆம் தேதி அனுப்பி இருந்தார். அந்த கடிதம் முதல்வருக்கு சென்று சேர்ந்ததோடு, சமூக வலைதளங்களில் பரவியது.

மாணவி கடிதம்

மாணவி கடிதம்

அந்தக் கடிதத்தில்," எங்கள் பள்ளி வளாகத்தில் இடவசதியே இல்லை. ரெண்டு பள்ளிக்கூடத்துக்கும் விளையாட்டு மைதானமே கிடையாது.. வகுப்பறை வசதியும் கிடையாது. என்னோட தனித்திறமைகளை வளர்த்துக்க இங்க எந்த ஒரு வசதியும் இல்லை. எனவே எங்க அப்பா அம்மா உன்னை ஆறாம் வகுப்புக்கு வெளியூர் பள்ளிக்கூடத்துக்கு அதுவும் தனியார் பள்ளிக்கு சேர்க்க போறோம்னு சொல்றாங்க.. ஆனா எனக்கு அரசு பள்ளியில் அதுவும் எங்க ஊரு அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே படிக்கணும் என ஆசையா இருக்கு ஆனா இந்த இட வசதியே இல்லாம எல்லோரும் ரொம்ப கஷ்டப்படுறாங்க ஐயா..

பள்ளி கட்டிடம்

பள்ளி கட்டிடம்

எங்க ஊர்ல அரசுக்கு சொந்தமான கோவில் இடம் சும்மா இருக்குன்னு எங்க வீட்டுல அப்பா அம்மா பேசுவதை கேட்டு இருக்கேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா நினைச்சா இந்த இடத்துல பள்ளிக்கூடம் வரும்னு சொன்னாங்க.. அப்போ நான் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு மனு அனுப்புறேன்னு சொன்னேன். அதுதான் ஐயா நான் மனு அனுப்புறேன். எப்படியாவது நீங்க எங்க ஊர் அரசாங்க கோயில் இடத்தில் மேல்நிலைப் பள்ளி கட்டி என்னைப் போல எங்க ஊரு மாணவர்கள் எல்லோரும் இங்கே படிக்க உதவ வேண்டும் ஐயா.. நீங்க அடுத்த மாதம் தென்காசிக்கு வர்றீங்கன்னு எங்க அப்பா சொன்னாங்க, உங்கள நான் நேர்ல சந்திச்சதும் மனு கொடுக்க ஆசையா இருக்கு எனது ஆசையை நிறைவேற்றி தாங்க ஐயா" என கடிதம் எழுதி இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது அந்த சிறுமியின் கடிதம் குறித்தும் பேசினார். சிறுமியின் பெயரான ஆராதனா எனக் குறிப்பிட்டு,"இந்த சிறிய வயதில் சிறுமி எழுதி அந்த கடிதத்தை படித்ததும் எனக்கு பெருமையாக இருந்தது.. எவ்வளவு நம்பிக்கை அவர் என் மீது வைத்திருந்தால் அவர் இப்படி எனக்கு கடிதம் எழுதி இருப்பார். அந்த குழந்தை ஆராதனா கோரிக்கை ஏற்கப்பட்டது. என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன்" எனக் கூறியதோடு முதற்கட்டமாக சுமார் 35 லட்சம் ரூபாயை பள்ளி கட்டிடங்கள் கட்டித் தர ஒதுக்கீடு செய்தார். இதை அடுத்து அந்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

முதல்வருக்கு நன்றி

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும் என சிறுமி ஆராதனா மீண்டும் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் "நான் அனுப்புன மனுவை ஏற்றுக் கொண்டு எனது பள்ளிக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. இதே பள்ளியில் படித்து பெரிய ஆளாகணும்னு சொன்னிங்க ஐயா.. நிச்சயம் அதே மாதிரி நான் ஆவேன்.. ஐயா அப்போதும் நீங்களே முதலமைச்சராக இருக்கணும். எங்க அப்பா அம்மா ஊர் மக்கள் என் நண்பர்கள் யாரும் சந்தோஷப்பட்டார்கள் ஐயா உங்கள நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையா இருக்கு" என குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த கடிதமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+