‛‛மோப்பம் பிடித்த என்ஐஏ’’.. தஞ்சாவூர் ரெய்டில் 2 பேர் திடீர் கைது.. பின்னணி என்ன? பரபர விசாரணை
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அவ்வப்போது என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை என்பது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள், தொடர்பில் இருப்பதாக கருதப்படும் நபர்களின் வீடு, அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சோதனைகளின்போது லேப்டாப், பென் டிரைவ் உள்பட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று காலையில் தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் திடீரென்று என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொள்ள தொடங்கினர்.
தஞ்சாவூர் உள்பட தமிழகத்தில் மொத்தம் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். ஹிஜ்புத் தகர், அல் உம்மா இயக்கங்களுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 4 இடங்களில் என்ஐஏ சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி என்ஐஏ டிஎஸ்பி ராஜன் தலைமையிலான அதிகாரிகர் தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது, சாலியமங்கலத்தில் உள்ள முஜிபுர் ரகுமான், அப்துல் காதர், மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் ஆகியோர் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவரின் வீடுகளிலும் 4 என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய மின்னணு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான், அப்துல் காதர் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரை எதற்காக கைது செய்தனர்? பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.
ஆனாலும் கைதான 2 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இந்திய தண்டனை சட்டம் 153 பி, 121 ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேரையும் மேல்விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications