நடிகை கஸ்தூரி நறுக்..ஒரு கேள்வியும் ஸ்டாலின் கேக்கலியே? சத்யராஜ் எங்கே? மடியில் கை வைக்குதே கர்நாடகா
தஞ்சாவூர்: எங்களுக்கு தண்ணீர் தருகிறாயா? இல்லாவிட்டால் கூட்டணியை கலைக்கட்டுமா? என்று ஒரே ஒரு கேள்வியை கேட்காமல், இருக்கிறாரே தமிழக முதல்வர் ஸ்டாலின்? திமுக - காங்கிரஸ் கூட்டாளிகளாக இருப்பதால் காவிரி பிரச்சினையை அவர்கள் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை கிடையாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
காவிரி நீர் கொடுக்காத கர்நாடகா மாநிலத்துக்கு வழங்கி வரும் மின்சாரம், வணிகத்துக்காக அனுப்பப்படும் உணவுப் பொருட்களை நிறுத்த வேண்டும்" என்று நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கஸ்தூரி சொன்னதாவது: "திமுக - காங்கிரஸ் கூட்டாளிகளாக இருப்பதால் காவிரி பிரச்சினையை அவர்கள் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை கிடையாது.. காவிரி நீர் கடல் வரை சென்று கலக்க வேண்டும்.. ஜீவநதி என்ற பெயரே, அப்போதுதான் அந்த நதிக்கு பொருந்தும்.. ஆனால், அங்கங்கே, அணைகளை கட்டினால் அந்த நதி, குளம், குட்டையாகி கடைசியில் சாக்கடையாகத்தான் மாறும்.
காவிரி சொந்தம்: கர்நாடகாவில் உள்ள பாஜக உள்பட அங்குள்ள அனைத்து கட்சிகளும், நமக்குதான் காவிரி சொந்தம் என்று அங்குள்ள மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.. கிருஷ்ணசாகர் அணையை கட்டிய விஸ்வரேஸரய்யர்தான், காவிரியை தோண்டி எடுத்தார் என்று இன்னமும் நம்புகிறார்கள்.. அங்கு படித்தவர்கள்கூட இதைத்தான் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு கேவலமான அரசியல் சூழ்நிலையில், வாக்கு அறுவடைக்காக செயல்படும் கர்நாடகா அரசியல்வாதிகளுக்கு நாம் கண்டனத்தை தெரிவித்து வருகிறோம்.
ஆனால், இண்டியா கூட்டணியிலுள்ள தமிழக முதல்வர், தண்ணீர் தருகிறாயா? இல்லை, கூட்டணியை கலைக்கட்டுமா? என்று ஒரே ஒரு கேள்வியை கேட்காமல், திரைமறைவாகச் செயல்படுவோம் என்று சொல்லி வருகிறார்.. அதனால்தான், காவிரி நீர் பிரச்சினைக்கு எல்லாருமே சேர்ந்து போராட வேண்டும்.
சத்யராஜ் எங்கே: தமிழக திரைத்துறையில் இன்று சில விநியோகஸ்தர்கள், வியாபாரிகளை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, காவிரி பிரச்சினையில் ஈடுபடாமல் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. காவிரிக்காக குரல் கொடுத்த நடிகர் சத்யராஜ் போன்றவர்கள், தமிழக முதல்வருக்கு, போனில் தொடர்பு கொண்டாலே, சுலபமாக காவிரி பிரச்சனையை முடித்து விடலாம்.. ஆனால், அவர்கள் ஏன் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும்.. இருந்தாலும், தெரியவில்லை என்று தான் நான் சொல்ல முடியும்.
நடிகர் சித்தார்த் திமுக - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவர் அவமானப்படுத்தப்பட்டபோது, அந்த கட்சியினர் சித்தார்த்தை கைவிட்டு விட்டார்கள்.. அவர் தமிழகத்துக்காகவும், காவிரிக்காகவும் குரல் கொடுத்திருந்தால், அவரது படத்தை இங்குள்ள பார்வையிட்டு அவரை கொண்டாடியிருப்பார்கள். இப்போது, திரைத்துறையில் மத, சாதிய ரீதியாக பிளவுகள் ஏற்பட்டு வருகிறது.
கர்நாடகா: இந்த பந்த்தை தமிழ்நாட்டில் செய்து, தமிழக மக்களுக்கு நஷ்டத்தை தருவதைவிட, கர்நாடகத்தில் எல்லையில செய்தால் நல்லது.. முழு அடைப்பு போராட்டத்தை கர்நாடகா மாநில எல்லையில் நடத்தி, அவர்களுக்கு வழங்கப்படும் மின்சாரம், அனுப்பப்படும் உணவுப் பொருட்களை நிறுத்த வேண்டும். 2 மாநிலங்களுக்கு இடையே உள்ள வணிக செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்..
நாம் ஏன் நம்முடைய மாநிலத்தில் பந்த் நடத்த வேண்டும்? எதுக்காக வருமானத்தையும், நம்முடைய வியாபாரத்தையும் ஏன் கெடுத்து கொள்ள வேண்டும். அவங்க அதைதானே செய்றாங்க? ஒரு சினிமாவைகூட தடுத்து நிறுத்தறாங்களே...
சினிமாவுக்கும், காவிரி தண்ணிருக்கும் என்ன சம்பந்தம்? அவர்களின் எல்லையில் சென்று பந்த் நடத்தி, வியாபாரத்தையும், வருமானத்தையும் தடுத்து நிறுத்தினால்தான், வழிக்கு வருவார்கள் என்று நான் நினைக்கிறேன்.
அடிமடியிலேயே: அவங்க நமக்கு தண்ணீரை நிறுத்தினால், நாம் அவர்களுடனான சகவாசத்தை நிறுத்துவோம்.. தக்காளியிலிருந்து கத்தரிக்காயிலிருந்து, மின்சாரத்திலிருந்து நிறுத்த வேண்டும். நெய்வேலியில் அன்று கரண்ட் நிறுத்தி, போராட்டம் நடத்தியதுமே, அடுத்த 2 நாளில் நமக்கு தண்ணீர் வந்து சேர்ந்ததே.. நம்ம அடிமடியிலேயே கைவைக்கறாங்களே.. நம்ம வாயில் அடிக்கிறாங்களே, வயித்துல அடிக்கிறாங்களே, அவங்களுக்கு மட்டும் எந்த வலியும் தெரியலியே" என்றார் கஸ்தூரி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications