80 பெண்களை ஏமாற்றிய தஞ்சை இளைஞர் கைது.. மொபைலை பார்த்ததும் மிரண்டு போன போலீஸ்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றிய நபரை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பெண்களைக் குறிவைத்துப் பல குற்றங்கள் நடைபெறுகிறது. அதைத் தடுக்கவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், அதையும் தாண்டி பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
ஷாக் சம்பவம்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்துள்ள இடையாநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மேட்ரிமோனியில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அப்போது மேட்ரிமோனி மூலம் அறிமுகமானவர் தான் சக்கரவர்த்தி.. இருவரும் பேச ஆரம்பித்த நிலையில், அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகச் சக்கரவர்த்தி கூறியுள்ளார். அப்படியே கூறி சுமார் 20 பவுன் தங்க நகைகளை வாங்கியுள்ளார்.
ஆனால், அதன் பிறகு திருமணம் செய்யாமல் தவிர்த்து வந்துள்ளார். அதன் பிறகு இளம்பெண் கால் செய்த போதும் எடுப்பதில்லையாம். இதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண் இது குறித்துக் கடந்த நவம்பர் மாதம் திருவிடைமருதூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவிடைமருதூர் போலீசார், தனிப்படை அமைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.
யார் இவர்: தலைமறைவாக இருந்த சக்கரவர்த்தியை போலீசார் தேடியநிலையில், திருவிடைமருதூரில் வைத்து சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது அவர் கூறிய தகவல்கள் பகீர் கிளப்புவதாக இருந்தது.
அதாவது சக்கரவர்த்தியின் சொந்த ஊர் திருவண்ணாமலையாகும். 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர், சென்னையில் இன்ஜினியராக வேலை பார்ப்பதாக்கச் சொல்லி மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். அதிலும் மேட்ரிமோனியில் அவர் இரண்டாவது திருமணத்திற்குப் பதிவு செய்த பெண்களை மட்டுமே குறிவைத்து ஏமாற்றியுள்ளார். பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் இவர், அவர்களை ஏமாற்றி நகை, பணத்தையும் வாங்கிக் கொள்கிறார்.
மேலும், இதன் மூலம் சொகுசு கார், நட்சத்திர விடுதி, மது என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். இப்படி இவர் மீது ஏற்கனவே 8க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அவரிடம் இருந்து 15 பவுன் தங்க நகை, ஒரு லட்சம் ரொக்கம், ஒரு கார், செல்போன் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
80 பெண்கள்: போலீசார் அவரது மொபைலை பரிசோதனை செய்த போது தான் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த மொபைலில் அவர் 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரிடம் அடுத்தகட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அவர் பல பெண்களை ஏமாற்றி இருக்கக்கூடும் என்ற போலீசார் சந்தேகிக்கும் நிலையில், போலீசார் அவரிடம் அடுத்தகட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
வரும் நாட்களில் விசாரணையில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications