சட்டக் கல்லூரி மாணவருக்கு.. பட்டப் பகலில் அரிவாள் வெட்டு.. கலவரமான தஞ்சாவூர் பெட்ரோல் பங்க்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பெண் ஊழியருக்கும், சட்டக் கல்லூரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பெண் ஊழியரின் கணவர், தன் மனைவியிடம் தகராறு செய்த சட்டக் கல்லூரி மாணவரை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டியுள்ளார். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தஞ்சாவூர், காந்தி சாலை, ஆத்துப்பாலம் அருகே, தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இன்று காலை அங்கு பாலசுப்பிரமணியம் என்பவர் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுள்ளார். அந்த நேரத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண் ஊழியர் ஜெயராணிக்கும், பாலசுப்ரமணியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுற்றி இருந்தவர்கள் சமாதானப்படுத்த முயற்சி செய்தும் பிரச்னை ஓயவில்லை.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. இதனால் பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஜெயராணி, தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு வரச்சொல்லியுள்ளார். இதேபோல பாலசுப்பிரமணியமும் தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு உடனடியாக வரச்சொல்லியுள்ளார்.
பாலசுப்ரமணியனின் மகன் ஹரிஹரன் சட்டக்கல்லூரி மாணவராக உள்ளார். சம்பவ இடத்தில் இரண்டு தரப்பினரும் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஹரிஹரன் தன் உறவினர்களுடனும், ஜெயராணியின் கணவர் தன் நண்பர்களுடனும் வந்திருந்தனர். ஆனால் வாக்குவாதம் தீவிரமாகிக் கொண்டே சென்றது. ஒருகட்டத்தில் ஹரிஹரன் கோபத்தில், ஜெயராணியின் கணவரை தாக்கிவிட்டார்.
இதை எதிர்பாராத ஜெயராணியின் கணவர், ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த பட்டக்கத்தியை கையில் எடுத்தார். தொடர்ந்து பட்டாக்கத்தி மூலம் ஹரிஹரன் மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளார். இதனால் இந்த இடத்தில் பதற்றம் தொற்றி கொண்டது. இதையடுத்து, அங்கிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.
இந்தத் தாக்குதலில், ஹரிஹரனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications