மாட்டுப்பொங்கல் கோலாகலம்..தஞ்சை நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம்..காய்கறிகளால் பிரம்மாண்ட அலங்காரம்
தஞ்சாவூர்: மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தஞ்சாவூர் பெரியகோவில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. காய்கறி, பழங்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் 108 பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது. பெரியகோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
உழவர்களுக்கு உதவி செய்யும் காளைகளுக்கு நன்றி கூறும் விதமாக இன்றைய தினம் மாட்டு பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுத்தொழுவங்களில் பொங்கல் வைத்து கொண்டாடினர். நெல்லை அருகன்குளம் கோசாலையில் பொங்கல் வைத்து உணவு படைத்து வழிபட்டனர். இங்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது. நந்தியம்பெருமானுக்கு மகரசங்கராந்தி விழா பொங்கல் பண்டிகை சிறப்பு பூஜைகள் நேற்று தொடங்கியது. இதையொட்டி நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
மாட்டுப்பொங்கல் பண்டிகையையொட்டி இன்றைய தினம் காலையில் பலவித வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சவ்சவ், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும் பிரம்மாண்ட நந்தியின் கழுத்தை சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டது.

ஆரஞ்சுபழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பலவகையான பழங்களாலும், முறுக்கு மற்றும் பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்தியம்பெருமானுக்கு நெக்லஸ் போல அலங்காரம் செய்யப்பட்டது. சந்தன காப்பு பூசப்பட்ட நந்தியின் முகம் ஜொலித்தது. இதனையடுத்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மொத்தம் 700 கிலோ காய்கறிகள், மலர்கள், இனிப்புகள், பழங்களால் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டதை காணவே அற்புதமாக இருந்தது.
மாட்டுப்பொங்கலையொட்டி 108 பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமான் சிலை முன்பு பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, மாடுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் மாடுகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நந்தியம்பெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
மாட்டு பொங்கலை முன்னிட்டு விடுமுறை நாள் என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வந்து பிரகதீஸ்வரரை தரிசனம் செய்தனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications