காவிரி பிரச்சனையா? ‘அண்ணன்’ சீமான் வைத்திருக்கும் ”ஐடியா” தெரியுமா? இந்தியாவே ”மிரண்டு” போயிடும்!
தஞ்சாவூர்: காவிரி நதிநீர் என்பது நாம் தமிழர் கட்சிக்கு ஒரு பிரச்சனையே இல்லை.. கடலூரில் இருந்து காவிரி டெல்டாவுக்கு நீரை கொண்டு போகும் திட்டம் வைத்திருக்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனை என்பது பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. அரசர்கள் காலத்தில் இருந்து தொடருகிற ஒரு பிரச்சனை. நாடு விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியிலும் இருந்தது. நாடு விடுதலைக்குப் பின்னர் இப்போதும் காவிரி பிரச்சனை தொடருகிறது.

இதனிடையே காவிரி நதிநீரை தர மறுத்த கர்நாடகா அணைகளைத் தகர்க்க தமிழ்நாடு விடுதலைப் படை என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பை நடத்திய தமிழரசன் முயற்சித்தார்; திடீர் தமிழ் தேசியவாதியான சந்தனக் கடத்தல் வீரப்பனும் காவிரி பிரச்சனையை கையில் எடுத்தார். இந்த வன்முறை பாதைகளாலும் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணம முடியவில்லை.
நாடு விடுதலைக்குப் பின் அரசியல் நடவடிக்கைகளால் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு சட்டப்பூர்வமாக நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் போதுமான காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு இன்னமும் உச்சநீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது.

இத்தனை ஆண்டுகாலமாக நீடிக்கும் காவிரி பிரச்சனை தொடர்பாக
தஞ்சாவூரில் இன்று சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் அளித்த பதில்: காவிரி எனக்கு பிரச்சனையே இல்லை... இஸ்யூவே இல்லையே.. காவிரி பிரச்சனைக்கு நான் ஏன் அவன்கிட்ட (கர்நாடகாவிடம்) கையேந்தனும்?
காவிரியில் கர்நாடகாவின் 180 டிஎம்சி, 1980 டிஎம்சி நீர்தான் இருக்கும். 2,100 டிஎம்சி நீரை நாம் கடலில் கலக்க விடுகிறோம். 5,000 ஏக்கரில் ஏர்போர்ட் கட்டுறதுக்கு பதிலாக 5,000 ஏக்கரில் ஏரியை வெட்டிட்டு போக வேண்டியதுதானுங்க..
எனக்கு என் பாட்டன் அரசேந்திர சோழன் கட்டிய வீர நாராயணன் ஏரி (வீராணம் ஏரி) இருக்குங்க.. அது சிறு கடலுங்க.. 16 கி.மீ. தூரம்.. அதை தூர்வாரி பராமரிச்சு ஒவ்வொரு ஆண்டும் கடலூரில் பெய்யுற வெள்ள நீரை, மழை நீரை சேமிச்சுன்னா.. நேரா கால்வாய்.. அல்லது பெருங்குழாய்.. ராட்ச குழாயில் காவிரி படுகையில் கொண்டாந்து இறக்கிடுவேன்.

60 வருஷமாக ஆண்டுவிட்டு அவன்கிட்ட (கர்நாடகாவிடம்) போய் கையேந்திகிட்டு.. உனக்கு இந்த பிரச்சனை தீர்க்கப்படக் கூடாது; தீர்க்கப்பட்டுவிட்டால் உனக்கு அரசியல் இல்லை. அவனுக்கு (கர்நாடகா) தமிழனுக்கு தண்ணீர் கொடுத்துட்டா அரசியல் இல்லை. அவன் (கர்நாடகா) கிட்ட் இருந்த தண்ணீர் வாங்கிட்டா இவனுக்கு அரசியல் இல்லை.
எனக்கு தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருக்குதுங்க... நான் சேமிச்சு காட்டுறேன். தண்ணீர் தேவைக்காக எவன்கிட்ட கையேந்தாம, பொன்னம்பலாவில் ஒரு அணையை போட்டேன்னு வெச்சுக்குங்க.. அவனே (கேரளா) முல்லை பெரியாறு அணையில் தண்ணீரை திறந்துவிட்டுவான்.. இவ்வாறு சீமான் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications