தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆற்றில்.. ஆடையில்லாமல் உயிருடன் கிடந்த பாட்டி.. அலறிப்போன பேராவூரணி.. மரணித்த மனிதம்.. கொடுமை..!

மூதாட்டியை உயிருடன் ஆற்றில் வீசி சென்றுள்ளனர்

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: ஒரு பாட்டியை உயிரோடு ஆற்றுக்குள் வீசிச்சென்ற சம்பவம் பதைபதைக்க வைத்து வருகிறது.. இந்த சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.

தஞ்சாவூர் பேராவூரணியை சேர்ந்தவர் அந்த பாட்டி.. கண்பார்வை சரியாக தெரியாது.. அந்த பகுதியில் உள்ள பஸ் ஸ்டேண்டு, ரயில்வே ஸ்டேஷன் என பல இடங்களில் கடந்த சில நாட்களாகவே பிச்சை எடுத்து வந்துள்ளார்..

இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை

ஆனால், இவரது சொந்த ஊர் தெரியவில்லை.. தற்போது லாக்டவுன் போட்டுவிடவும் மக்கள் நடமாட்டம் சாலைகளில் குறைந்துவிட்டது..

 பட்டினி

பட்டினி

இதனால், பாட்டிக்கு கையில் காசில்லை.. சாப்பிடவும் வழியில்லை.. அளவுக்கு அதிகமான சோர்வு இருந்ததால், எங்குமே நடந்து சென்று பிச்சைகேட்கவும் முடியாத நிலைமை.. அதனால், ரயில்வே ஸ்டேஷன் எதிரே இருந்த ஒரு மரத்தடியில் 2 நாட்களாக பட்டினியாகவே இருந்துள்ளார். இதை அந்த வழியாக சென்ற ஒருசிலர் பார்த்துள்ளனர்.. அவரை தூக்கி வந்து பழைய பஸ் ஸ்டேண்ட் பின்பக்கமாக உள்ள கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலுக்குள் நிர்வாணமாகவே போட்டுவிட்டு சென்று விட்டனர்..

 வாய்க்கால்

வாய்க்கால்

அந்த வாய்க்கால் பகுதி புதர்மண்டி கிடந்தது.. அதற்குள் உயிருடன் மிதந்து கொண்டிருந்தார் பாட்டி.. இதை கண்ட சிலர் சடலம் என்று நினைத்து, பேரூராட்சி ஆபீசுக்கு போன் செய்து, ஆனந்தவல்லி வாய்க்காலில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, பாட்டி உயிருடன் இருப்பது தெரியவந்தது..

 புது சேலை

புது சேலை

உடனடியாக அவரை மீட்ட போலீசார், புது சேலை ஒன்று வாங்கி வந்து பாட்டியின் மேல் போர்த்தினர்.. அவரை துப்புரவு பணியாளர்கள் பாண்டி, விஜய் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆற்றிலிருந்து தூக்கி வந்து பஸ் ஸ்டாண்டில் உட்கார வைத்தனர்.. தண்ணி வேண்டும் என்று பாட்டி கேட்டார்..

 சிகிச்சை

சிகிச்சை

உடனே அவருக்கு டீயும், தண்ணீரும், அங்கிருந்து கிராம உதவியாளர் வாங்கி தந்தார்.. பிறகு, பாட்டியை பத்திரமாக எல்லாரும் சேர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.. இப்போது பாட்டி சிகிச்சையில்தான் உள்ளார். இந்த பாழுங்கொரோனா யாரை எப்போது கொண்டு போகும் தெரியாத சூழலில், கொஞ்சம்கூட மனிதமே இல்லாத இந்த மிருகங்களை என்னவென்று சொல்வது?

English summary
Near Peravurani, An Old woman was thrown alive into the river
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X