சசிகலா சபதம் 2.0: தெய்வம் என் பக்கம் வஞ்சகமும் சூழ்ச்சியும் என் எதிரே நிற்காது...சும்மா விடமாட்டேன்
எனக்கு எதிராக மிகப்பெரிய சூழ்ச்சி நடந்திருக்கிறது. தெய்வம் என் பக்கம் இருப்பதால் வஞ்சமும் சூழ்ச்சியும் எதுவும் என்னை செய்யாது என்று கூறியுள்ளார் சசிகலா.
தஞ்சாவூர்: அரசியலை விட்டு சசிகலா ஒதுங்கினாலும் அரசியல்வாதிகள் அவரை விட்டு ஒதுங்குவதாக இல்லை ஆனாலும் எதையும் கண்டுகொள்ளாமல் சசிகலா தனது பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டார். எனக்கு எதிராக மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெற்றுள்ளதாக கூறும் சசிகலா, தெய்வம் தன் பக்கத்தில் இருப்பதால் எந்த ஒரு வஞ்சகமும் சூழ்ச்சியும் என் எதிரே நிற்காது என்று கூறியுள்ளார்.
பெங்களூரு சிறையில் இருந்து வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறினார். திடீரென அரசியலை விட்டு ஒதுங்குவதாக ஒரே அறிக்கையில் முடித்துக்கொண்டார். வீட்டை விட்டு எங்கும் போகாமல் இருந்த சசிகலா திடீரென தஞ்சாவூருக்கு பயணப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்தில் கணவர் நடராஜன் குடும்பத்தினர் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பதற்காக வந்த சசிகலா குல தெய்வ கோவிலில் வழிபட்டார். திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் யாகம் செய்து வழிபட்ட சசிகலா, கணவர் நடராஜன் சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு விட்டார்.

உறவினர்கள் ஆறுதல்
தஞ்சாவூரில் இருந்தவரைக்கும் கணவர் நடராஜனின் உறவினர்கள் சசிகலாவின் கூடவே இருந்துள்ளனர். தினகரன் குடும்பத்தினரை பார்ப்பதை சுத்தமாக தவிர்த்து விட்டாராம் சசிகலா. கணவர் வழியில் வந்த சொத்துக்கள் எதையுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.

எனக்கு எதிரான திட்டம்
குல தெய்வ கோவிலில் கண் கலங்கி நின்ற சசிகலா உறவினர்களிடமும் கண் கலங்க பேசினாராம். என் கணவர் மரணமடைந்த போதே எனக்கு வாழ்க்கை மேலே இருந்த பிடிப்பு போய்விட்டது என்று சொன்னாராம் சசிகலா. யாரை நம்பியிருந்தேனோ அந்த உறவுகளே எனக்கு எதிராக நடப்பார்கள் என்று நினைக்கவில்லை என்று சசிகலா மனம் நொந்து பேசியதாக சொல்கின்றனர் அருகில் இருந்தவர்கள்.

எனக்கு எதிராக சதி
சிறையில் இருந்த போதே எனக்கு எதிராக பலரும் சூழ்ச்சி செய்திருக்கின்றனர். வெளியே வந்து நம்பிக்கையானவர்கள் சொன்ன பிறகுதான் அவர்களின் சூழ்ச்சி எனக்கு தெரியவந்தது. வஞ்சகமும் சூழ்ச்சியும் சில காலம்தான் ஜெயிக்கும் என்று சசிகலா சொன்ன போது அவரது ஒருவித விரக்தி வெளிப்பட்டதாக கூறுகின்றனர்.

சும்மா விடமாட்டேன்
எந்த வஞ்சகமும் சூழ்ச்சியும் என்னை எதுவும் செய்யாது ஏனென்றால் தெய்வம் என் பக்கம் இருப்பதாக கூறினாராம் சசிகலா.
ஜெயிலை விட்டே நான் வரக்கூடாது என்று சிலர் நினைத்துள்ளனர் அவர்களை நான் ஒருபோதும் சும்மா விடமாட்டேன் என்றும் சொன்னாராம் சசிகலா

உறவுகளால் வேதனை
சசிகலாவிற்கு உறவுகளால்தான் தலைவலியே. உறவினர்கள் செய்த சதியால்தான் கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதாவே அவரை போயஸ்கார்டனை விட்டு ஒதுக்கி வைத்தார். பின்னர் அவரை மட்டும் மன்னிப்புக்கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு சேர்த்துக்கொண்டார். இப்போதும் உறவினர்களால்தான் மனவேதனை அடைந்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications