தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தஞ்சாவூரில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி

ஒரத்தநாடு ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இரவு துரித உணவுகத்தில் ஷவர்மா சாப்பிட்டதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஷவர்மா சாப்பிட்ட பின்னர் மயக்கம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Recommended Video

    தஞ்சாவூர்: கதிகலங்க வைக்கும் ஷவர்மா.. விஷமாகும் உணவு... மூன்று மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    சமீபத்தில் கேரள மாநிலம் காசர்கோடு செருவத்தூர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி தேவாநந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கெட்டுப்போன கோழி இறைச்சியில் ஷவர்மா தயாரிக்கப்பட்டதால் தேவநந்தாவுக்கு ஃபுட் பாய்சன் ஆனதாக விசாரணையில் தெரியவந்தது.

     இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள்.. அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.. அமைச்சர் சிவசங்கர் அதிரடி இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள்.. அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.. அமைச்சர் சிவசங்கர் அதிரடி

    இதனையடுத்து மங்களூரைச் சேர்ந்த முகம்மது அனஸ், மற்றும் ஷவர்மா தயாரித்த நேபாளத்தைச் செர்ந்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். தரமில்லாத சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் உயிர் பலிபோவது கேரளத்தில் இது முதன்முறை இல்லை. 2012 ஜூலையில் திருவனந்தபுரத்தில், கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் நடைபெற்றது.

    தமிழகத்தில் ஷவர்மா கடைகளில் ஆய்வு

    தமிழகத்தில் ஷவர்மா கடைகளில் ஆய்வு

    இதை தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள ஷவர்மா கடைகளில் கெட்டு போன இறைச்சி உள்ளதா? என உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபும், திருப்பூர் மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக மதுரை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

     மதுரையில் சோதனை

    மதுரையில் சோதனை

    மதுரையில் ஜெயராம் தலைமையில் குழு, குழுவாக பிரிந்து முக்கிய இடங்களின் அனைத்து ஷவர்மா கடைகளிலும் திடீர் சோதனை நடத்தினர். 52 கடைகளில் 30க்கும் அதிக குழுவினராக பிரிந்து இந்த அதிரடி சோதனையில் தனித்தனியாக ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் ஆய்வு

    அதிகாரிகள் ஆய்வு

    ஷவர்மா முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். இதில் சில கடைகளில் கெட்டுப்போன பழைய கோழிக்கறி பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து, 5 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும் பல்வேறு கடைகளில் இருந்தும் 10 கிலோ அளவிற்கான அழுகிய கோழிக்கறியையும் பறிமுதல் செய்தனர். இதே போல காஞ்சிபும், திருப்பூர் உட்பட பல மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    மாணவர்களுக்கு பாதிப்பு

    மாணவர்களுக்கு பாதிப்பு

    ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் பயிலும் பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் ஆகியோர் ஒரத்தநாட்டில் உள்ளதுரித உணவகத்தில் நேற்று இரவு ஷவர்மா சாப்பிட்ட நிலையில் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களுக்கு உடனடியாக அருகில் இருந்து மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை

    தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை

    மேல் சிகிக்சைக்காக தற்போது தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று மாணவர்களுக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Thanjavur student health issue ate shawarma: (ஷவர்மா சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு)Students studying at Orathanadu Veterinary College were admitted to Tanjavur Medical College Hospital with food allergies after eating shawarma at a fast food restaurant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X