கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி .. உதயநிதி ஸ்டாலின் ஆரூடம்!
தஞ்சை: கருணாநிதி பிறந்தநாளில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி என உதயநிதி ஸ்டாலின் ஆரூடம் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் டிகேஜி நீலமேகம் ஆகியோருக்கு வாக்கு கேட்டு தஞ்சையில் உதயநிதி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில் நான் பிரசாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். இதை மோடி எதிர்ப்பு அலை என சொல்கிறார்கள். ஆனால் இது ஸ்டாலினுக்கு ஆதரவு அலை.
கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது தமிழகத்துக்கு மோடி வரவில்லை. ஆனால் தற்போது தேர்தல் என்றவுடன் வந்து செல்கிறார். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் தருவதாக சொன்னார் மோடி.
ஆனால் ஒருவருக்கு கூட தரவில்லை. வரும் 18-ஆம் தேதி திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டது ஏன். எல்லாம் மோடி அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால்தான்.
5 ஆண்டுகளில் 3 ஆயிரம் விவசாயிகள், தற்கொலை செய்து கொண்டனர். மக்கள் வாக்களித்து எடப்பாடியை தேர்வு செய்யவில்லை. சசிகலாவின் காலை பிடித்துதான் அவர் முதல்வரானார். எனவே அவர் மக்கள் முதல்வர் இல்லை.
22 சட்டசபை தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். கருணாநிதி பிறந்தநாளான வரும் ஜூன் 3-ஆம் தேதி ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications